வரலாற்றில் இன்று : மே மாதம் 27

666
Mahela Jayawardene

1977ஆம் ஆண்டுமஹேல ஜயவர்தன பிறப்பு

இலங்கை கிரிக்கட் அணி பெற்ற நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான  மஹேல ஜயவர்தன 1977ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி கொழும்பில் பிறந்தார்.  வலது கைத் துடுப்பாட்ட வீரரான மஹேல 1997ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை அணிக்காக 149 டெஸ்ட் போட்டிகள், 48 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 55 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் இன்று : மே மாதம் 26

1986ஆம் ஆண்டுகவ்ஷால் சில்வா பிறப்பு

இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கவ்ஷால் சில்வாவின் பிறந்த தினமாகும். வலதுகைத் துடுப்பாட்ட வீரரான சில்வா 2011ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை இலங்கை அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

1975ஆம் ஆண்டுமைக் ஹசி பிறப்பு

அவுஸ்திரேலிய அணியின் Mr Cricket என்ற புனைப் பெயரைக் கொண்ட மைக் ஹசியின் பிறந்த தினமாகும். இடதுகைத் துடுப்பாட்ட வீரரான ஹசி அவுஸ்திரேலிய அணிக்காக 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 79 டெஸ்ட் போட்டிகள், 185 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 38 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் இன்று : மே மாதம் 25

2012ஆம் ஆண்டுகொல்கத்தா  அணி .பி.எல் சம்பியனானது

2012ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆவது .பி.எல் போட்டித் தொடரில் கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியை 5 விக்கட் வித்தியாசத்தில் தோற்கடித்து .பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 190 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய  கொல்கத்தா நயிட் ரைடர்ஸ்  அணி 19.4 ஓவர்களில் 192 ஓட்டங்களைப் பெற்று .பி.எல் தொடரை முதல் தடவையாக வென்றது.

மே மாதம் 27ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1863 ஆர்தர் மொல்ட் (இங்கிலாந்து)
  • 1863 சார்லஸ் ரைட் (இங்கிலாந்து)
  • 1870 லியோனல் பலைரட் (இங்கிலாந்து)
  • 1899 ஜார்ஜ் பார்க்கர் (தென் ஆபிரிக்கா)
  • 1926 கோர்டன் லெகட் (நியூசிலாந்து)
  • 1955 ஜொக் எட்வர்ட்ஸ் (நியூசிலாந்து)
  • 1957 ஜூடித் லெயிங் (அவுஸ்திரேலியா)
  • 1974 பவுலா பிலாநெரி (நியூசிலாந்து)
  • 1983 ஆலிவர் குடம் (பெர்முடா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்