2013ஆம் ஆண்டு – மும்பை அணி ஐ.பி.எல் சம்பியனானது
2013ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது ஐ.பி.எல் போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியை 23 ஓட்டங்களால் தோற்கடித்து ஐ.பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 148 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கிரோன் பொலார்ட் மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 60 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 125 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. மும்பை அணியின் பந்துவீச்சில் மலிங்க, ரயினா மற்றும் ஹசி ஆகியோர் முக்கிய விக்கட்டை வீழ்த்தினர். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியை 23 ஓட்டங்களால் தோற்கடித்து ஐ.பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது.
வரலாற்றில் இன்று : மே மாதம் 25
மே மாதம் 26ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1868 ஹோவர்ட் பிரான்சிஸ் (தென் ஆபிரிக்கா)
- 1938 லிஸ் ஆமோஸ் (அவுஸ்திரேலியா)
- 1947 க்லென் டர்னர் (நியூசிலாந்து)
- 1966 கிராண்ட் ப்ரட்பர்ன் (நியூசிலாந்து)
- 1976 ஹெலன் டேலி (நியூசிலாந்து)
- 1977 அவிஷ்க குணவர்த்தன (இலங்கை)
- 1979 மலிந்த வர்ணபுர (இலங்கை)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்