வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 02

1677
On this Day - June 02

1987ஆம் ஆண்டு எஞ்சலொ மெதிவ்ஸ் பிறப்பு

இலங்கை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கட் அணியின் தலைவரான எஞ்சலொ மெதிவ்ஸின் பிறந்த தினமாகும். டிரோன் மற்றும் மொனிக்கா தம்பதிகளின் புதல்வரான ஏஞ்சலோ மெதிவ்ஸ் தனது கல்வியை கொழும்பு புனித ஜோசப் கல்லூரியில் கற்றார். தனது 21ஆவது வயதில் இலங்கை தேசிய அணியில் இணைந்த எஞ்சலொ மெதிவ்ஸ் தற்போது வரை 58 டெஸ்ட் போட்டிகளிலும், 169 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

1965ஆம் ஆண்டுவோ சகோதரர்களின் பிறப்பு

அவுஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஸ்டீவ் வோ மற்றும் மார்க் வோ என்ற இரட்டை சகோதரர்களின் பிறந்த தினமாகும். வலதுகைத் துடுப்பாட்ட வீரர்களான இவர்கள் இருவரும் அவுஸ்திரேலிய அணி பெற்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களாவர்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 01

1989ஆம் ஆண்டுஸ்டீவ் ஸ்மித் பிறப்பு

அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின்  தலைவரான ஸ்டீவ் ஸ்மித்தின் பிறந்த தினமாகும். வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவர் 2010ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணியில் கிரிக்கட் வாழ்கையை ஆரம்பித்தார். உலகில் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக கணிக்கப்படும் இவர் தற்போது வரையில் அவுஸ்திரேலிய அணிக்காக 41 டெஸ்ட், 72 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 30 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஜூன் மாதம் 02ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1917 பெக்கி அன்டோனியோ (அவுஸ்திரேலியா)
  • 1929 ஜூன் ப்ரகர் (இங்கிலாந்து)
  • 1948 ட்ரெவர் ஜெஸ்டி  (இங்கிலாந்து)
  • 1955 ஜெரல்ட் பெகொவர்(சிம்பாப்வே)
  • 1967 கிளேர் லியரி (அயர்லாந்து)
  • 1967 ஆலன் ரதர்ஃபர்டு (அயர்லாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்