2005ஆம் ஆண்டு – அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தோல்வி
2005ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் 2ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 249 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 250 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.2 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 250 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது. பங்களாதேஷ் அணி சார்பாக முஹமத் அஸ்ரபுல் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து தனது அணியின் வெற்றிக்கு வழிசெய்தார்.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 17
ஜூன் மாதம் 18ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1914 பில்லி வாடே (தென் ஆபிரிக்கா)
- 1966 மெலிசா பெப்வொர்த் (அவுஸ்திரேலியா)
- 1974 மார்ட்டின் வான் ஜார்ஸ்வெல்ட் (தென் ஆபிரிக்கா)
- 1977 ரோவன் மில்பர்ன் (நியூசிலாந்து)
- 1987 கைல் அபாட் (தென் ஆபிரிக்கா)
- 1987 மொயின் அலி (இங்கிலாந்து)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்