2014ஆம் ஆண்டு – வியக்கத்தகு முடிவு
2014ஆம் ஆண்டு இலங்கை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தமது முதல் இனிங்ஸில் 575 ஒட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் தமது முதல் இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 453 ஓட்டங்களைப் பெற்றது. பின் இங்கிலாந்து அணி தமது 2ஆவது இனிங்ஸில் 8 விக்கட் இழப்பிற்கு 267 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 390 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினாலும் பிறகு விக்கட்கள் விரைவாக விழுந்தது. இறுதியில் ஆட்டம் சமநிலையில் முடிய கடைசி 6 பந்துகள் மீதம் இருக்க இலங்கை அணி 8 விக்கட் இழப்பிற்கு 201 ஓட்டங்களைப் பெற்று மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது. இறுதி ஓவரை ஸ்டுவர்ட் ப்ரோட் வீச அந்த ஓவரின் முதல் பந்தை ரங்கன ஹேரத் சந்தித்தார். அவர் அந்த ஓவரின் முதல் பந்திலே ஆட்டம் இழக்க இலங்கை அணி தோல்வியின் விளிம்பில் இருந்தது. ஆனால் கடைசி 5 பந்தையும் நுவான் பிரதீப் மிகவும் அவதானமாக சந்தித்து இலங்கை அணியைப் போட்டியின் தோல்வியில் இருந்து மீட்டார்.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 15
ஜூன் மாதம் 16ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1961 ரொப் கெர் (அவுஸ்திரேலியா)
- 1963 மொஹ்சின் கமல் (பாகிஸ்தான்)
- 1969 நெகேமியா பெர்ரி (மேற்கிந்திய தீவுகள்)
- 1982 லாரா ஸ்ப்ரக் (இங்கிலாந்து)
- 1982 எட் கொவ்ன் (அவுஸ்திரேலியா)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்