வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 11

363
OTD-June-11

1999ஆம் ஆண்டுசக்லேன் முஸ்தாக்கின் ஹெட்ரிக்

1999ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் போது பாகிஸ்தான் சிம்பாபே அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணியின் சக்லேன் முஸ்தாக் ஹெட்ரிக் விக்கட்டைக் கைப்பற்றினார். முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 271 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்து துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி 40 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 123 ஓட்டங்களைப் பெற்று இருந்த போது  சக்லேன் முஸ்தாக் 41ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் 3 பந்துகளிலும் விக்கட்டைக் கைப்பற்றி ஹெட்ரிக் விக்கட்டைக் கைப்பற்றினார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 10

ஜூன் மாதம் 11ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1935 பசல்-உர்-ரஹ்மான் (பாகிஸ்தான்)
1942 சோமசந்திர டி சில்வா (இலங்கை)
1967 ஹென்றி விலியம்ஸ் (தென் ஆபிரிக்கா)
1971 மார்க் ரிச்சர்ட்சன் (நியுசிலாந்து)
1975 மித்ரா வெத்தமுணி (இலங்கை)
1978 டெரல் டபி (நியுசிலாந்து)
1987 டீன் எல்கர் (தென் ஆபிரிக்கா)
1989 ரிச்மன்ட் முட்டும்பமி (சிம்பாப்வே)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்