வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 01

2772
OTD-June-1

2002ஆம் ஆண்டு – ஹன்ஸி குரொன்யே இறப்பு

தென் ஆபிரிக்க அணியின் கிரிக்கட் வீரரான ஹன்ஸி குரொன்யே இறந்த தினமாகும். 1969ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் திகதி பிறந்த இவர்  தனது 32ஆவது வயதில் ஒரு விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். 1992ஆம் ஆண்டு தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரை இவர் தென்ஆபிரிக்க  அணிக்காக 68 டெஸ்ட் போட்டிகளிலும் 188 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

2008ஆம் ஆண்டு – 1ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி

ஐ.பி.எல் கிரிக்கட் தொடர் 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதன் இறுதிப்போட்டி நடைபெற்ற நாளாகும். சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதிய இந்த இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 3 விக்கட்டுகளால் வெற்றிபெற்று முதலாவது ஐ.பி.எல் தொடரின் சம்பியன் பட்டதை வென்றது.

வரலாற்றில் நேற்றைய நாள் : மே மாதம் 31

2014ஆம் ஆண்டு – நைட் ரைடர்ஸ் அணி சம்பியனானது.

7ஆவது ஐ.பி.எல் போட்டித் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சம்பியனானது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.

ஜூன் மாதம் 01ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1919 ஓவன் வெய்ன் (தென் ஆபிரிக்கா)
1933 இயன் சின்க்ளேர் (நியூசிலாந்து)
1943 இயன் கிங் (அவுஸ்திரேலியா)
1949 மார்கரெட் ஜென்னிங்ஸ் (அவுஸ்திரேலியா)
1963 ஜென்னி ஓவன்ஸ் (அவுஸ்திரேலியா)
1973 ஷபியுதீன் அஹமத் (பங்களாதேஷ்)
1976 ஷாரியார் ஹொஸைன் (பங்களாதேஷ்)
1979 பிந்ஷவன் கோயல் (இந்தியா)
1985 தினேஷ் கார்த்திக் (இந்தியா)
1993 கசுன் ரஜித்த (இலங்கை)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்