1994ஆம் ஆண்டு – லாராவின் உலக சாதனை
உலகக் கிரிக்கட் வரலாற்றிலே முதல் தர கிரிக்கட் போட்டிகளில் அதிக ஒட்டங்களைப் பெற்ற வீரர் என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட நாயகன் ப்ரயின் லாரா பெற்றார். டர்ஹம் அணிக்கு எதிரான போட்டியில் வார்விக்ஷயர் அணிக்காக விளையாடிய லாரா 474 நிமிடங்கள் துடுப்பாடி 427 பந்துகளில் 62 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 501 ஓட்டங்களைப் பெற்றார்.
வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 05
1982 – முஹமத் இர்பான் பிறப்பு
கிரிக்கட் உலகில் உயர்ந்த மனிதன் என்ற பெருமைக்குரிய 7 அடி 1 அங்குலம் உயரமுடைய பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமத் இர்பானின் பிறந்த தினமாகும். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான முஹமத் இர்பான் 2010ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் பாகிஸ்தான் அணிக்காக 4 டெஸ்ட், 59 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஜூன் மாதம் 06ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1890 டெட் பொவ்லி (இங்கிலாந்து)
- 1909 மொரப்பகம் கோபாலன் (இந்தியா)
- 1917 பிரியர் ஜோன்ஸ் (மேற்கிந்திய தீவுகள்)
- 1956 என்டி பைக்ரோவ்ட் (சிம்பாப்வே)
- 1967 வசிம் ஹைதர் (பாகிஸ்தான்)
- 1968 கரேன் யங் (அயர்லாந்து)
- 1968 அலீம் டார் (பாகிஸ்தான்)
- 1969 சுனில் ஜோசி (இந்தியா)
- 1972 துலிப் லியனகே (இலங்கை)
- 1973 அஷ்பாக் அஹமத் (பாகிஸ்தான்)
- 1980 டெவல்ட் நெல் (ஸ்காட்லாந்து)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்