வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 04

585
Thilina Kandamby

1982ஆம் ஆண்டுதிலின கந்தம்பி பிறப்பு

இலங்கை அணியின் மத்திய தரவரிசைத் துடுப்பாட்ட வீரரான திலின கந்தம்பியின் பிறந்த தினமாகும். இடதுகைத் துடுப்பாட்ட வீரரான இவர் 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இலங்கை அணிக்காக 39 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 03

1991ஆம் ஆண்டுபென் ஸ்டோக்ஸ் பிறப்பு

நியுசிலாந்து நாட்டின் க்ரைஸ்சேர்ச் நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸின் பிறந்த தினமாகும். இடதுகைத் துடுப்பாட்ட வீரரான இவர் 2011ஆம் தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் இங்கிலாந்து அணிக்காக  24 டெஸ்ட் போட்டிகளிலும், 39 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 17 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

ஜூன் மாதம் 04ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1876 ரொபர்ட் டொவெர்  (தென் ஆப்ரிக்கா)
  • 1887 நெல்சன் பெடன்கொர்ட் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1910 ஜோர்ஜ் கெரோ  (மேற்கிந்திய தீவுகள்)
  • 1959 ரஸ்ஸல் டிபின் (சிம்பாப்வே)
  • 1973 கல்பன லியனாராச்சி (இலங்கை)
  • 1975 அலெக்ஸ் வார்ப் (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்