2011ஆம் ஆண்டு – ஒருநாளில் பல வரலாறுகள்
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 1ஆவது டெஸ்ட் போட்டியில் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 2000 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர் அந்தப் போட்டியில் 2000 ஓட்டங்களைப் பெறும்போது அந்த இனிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 326 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 202 ஓட்டங்களைப் பெற்று இருந்தார்.
அத்தோடு இந்தப் போட்டி இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 100ஆவது டெஸ்ட் போட்டியாகும்,அதுமட்டுமில்லாமல் டங்கன் பிளேசர் தனது 100ஆவது போட்டிகளுக்கு பயிற்சியாளராக செயற்பட்டு இருந்தார்.
1982ஆம் ஆண்டு – மொண்டே சொண்டகி பிறப்பு
தென் ஆபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொண்டே சொண்டகியின் பிறந்த தினமாகும்.
வலதுகை வேகப்பந்து வீச்சாளரான மொண்டே சொண்டகி தென் ஆபிரிக்க அணிக்காக 2003ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 விக்கட்டுகளையும், 13 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 11 விக்கட்டுகளையும், ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடி 1 விக்கட்டையும் வீழ்த்தி உள்ளார்.
ஜூலை மாதம் 24ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
1925 அலிஸ்டர் டெய்லர் (தென் ஆப்ரிக்கா)
1968 ரூடி பிரைசன் (தென் ஆப்ரிக்கா)
1983 இசோபெல் ஜாய்ஸ் (அயர்லாந்து)
1983 சிசிலியா ஜாய்ஸ் (அயர்லாந்து)