வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 23

372
OTD July 23

1953ஆம் ஆண்டு – கிரெஹம் கூச் பிறப்பு

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கிரெஹம் கூச்சின் பிறந்த தினமாகும். 6 அடி உயரமுள்ள வலதுகைத் துடுப்பாட்ட வீரரான கிரெஹம் கூச் இங்கிலாந்து அணிக்காக 1975ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரையிலான 20 வருட காலப்பகுதியில் 118 டெஸ்ட், 125 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக கடமையாற்றி உள்ள இவர் முன்னாள் கிரிக்கட் வர்ணனையாளர்களில் ஒருவரும் ஆவார். 118 டெஸ்ட் போட்டிகளில் 8900 ஓட்டங்களையும் 125 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 4290 ஓட்டங்களையும் இவர் இங்கிலாந்து அணிக்காகப் பெற்றுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 22

2008ஆம் ஆண்டு – DRS முறை பரீட்சிப்பு

இலங்கை இந்திய அணிகள் மோதிய போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியின் போது கிரிக்கட் உலகிற்கு DRS முறை முதன் முதலாக பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. இந்த போட்டியின் போது விரேந்தர் சேவாக்கிற்கு வீசப்பட்ட பந்து ஆட்டம் இழப்பா என வினவப்பட நடுவரால் இல்லை எனக் கூறப்பட்டது. அதன் பின் DRS முறை பரீட்சிப்பின் மூலம் அவர் ஆட்டம் இழந்த வீரர் என்று கூறப்பட்டார். இதன் மூலம் DRS முறை மூலம் ஆட்டம் இழந்த முதலாவது வீரர் விரேந்தர் சேவாக் ஆவார்.

ஜூலை மாதம் 23ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1949 க்ளீவ் ரைஸ் (தென் ஆபிரிக்கா)
1950 அலன் டர்னர் (அவுஸ்திரேலியா)
1952 பால் ஹிப்பேர்ட் (அவுஸ்திரேலியா)
1979 ரிச்சர்ட் சிம்ஸ் (சிம்பாப்வே)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்