1967ஆம் ஆண்டு – ஹசான் திலகரத்ன பிறப்பு
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ஹசான் திலகரத்னவின் பிறந்த தினமாகும். விக்கட் காப்பாளர் மற்றும் இடதுகைத் துடுப்பாட்ட வீரரான ஹசான் திலகரத்ன இலங்கை அணிக்காக 1986ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 83 டெஸ்ட் மற்றும் 200 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 13
2008ஆம் ஆண்டு – பெல் 199 ஓட்டங்களில் ஆட்டமிழப்பு
2008ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் இயன் பெல் 199 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். இவர் இவ்வாறு 199 ஓட்டங்களோடு ஆட்டம்`இழந்தமையால் “199 ஓட்டங்களோடு ஆட்டம் `இழந்த” வீரர்கள் பட்டியலில் 7ஆவது வீரராக இணைந்தார்.
ஜூலை மாதம் 14ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1863 ஆர்தர் கொனிங்ஹம் (அவுஸ்திரேலியா)
- 1964 லீ–ஆன் ஹண்டர் (அவுஸ்திரேலியா)
- 1965 ஜேம்ஸ் சதர்லேண்ட் (அவுஸ்திரேலியா)
- 1972 கிளாடின் வான் டி கெப்ட் (நெதர்லாந்து)
- 1982 ரஞ்சன் தாஸ் (பங்களாதேஷ்)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்