1976ஆம் ஆண்டு திலான் சமரவீர பிறப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீரவின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் – திலான் துசார சமரவீர

பிறப்பு 1976ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி

பிறந்த இடம் கொழும்பு

வயது 40

விளையாடிய காலப்பகுதி 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2013 வரையான காலப்பகுதி

துடுப்பாட்ட பாணி வலதுகை துடுப்பாட்டம்

விளையாடும் பாணிதுடுப்பாட்ட வீரர்

உறவுகள்துலிப் சமரவீர (சகோதரர்), பாத்தியா பெரேரா (மைத்துனன்)

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் 53

மொத்த ஒருநாள் ஓட்டங்கள் 862

அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் 105*

ஒருநாள் துடுப்பாட்ட சராசரி 27.80

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் 81

மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் 5462

அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் 231

டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி 48.76

பந்துவீச்சில் பகுதி நேரமாக சுழற்பந்து வீசும் திலான் சமரவீர ஒருநாள் போட்டிகளில் 49.27 என்ற பந்து வீச்சு சராசரியில் 11 விக்கட்டுகளையும் டெஸ்ட் போட்டிகளில் 45.93 என்ற பந்து வீச்சு சராசரியில் 15 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.


சமரவீர தொடர்பான சமீபத்திய செய்தி

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர கடந்த 3 வாரங்களுக்கு முன் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக இருந்த ஹீத் ஸ்ட்ரீக்கின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையிலே சமரவீர துடுப்பாட்ட பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

அடுத்த மாதம் இங்கிலாந்து அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு தற்போது துடுப்பாட்ட ஆலோசனை வழங்கி, அவர்கள் தயார்படுத்தப்பட்டு  வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


1962ஆம் ஆண்டு மார்ட்டின் க்ரோ பிறப்பு

நியூசிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மற்றும் கிரிக்கட் வர்ணனையாளரான மார்ட்டின் க்ரோவின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் – மார்ட்டின் டேவிட் க்ரோ

பிறப்பு 1962ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி

பிறந்த இடம் ஹென்டர்சன், ஆக்லாந்து

இறப்பு – 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03ஆம் திகதி

இறந்த இடம்ஆக்லாந்து

இறக்கும் போது வயது 53 ஆண்டுகள் மற்றும் 163 நாட்கள்

விளையாடிய காலப்பகுதி 1982ஆம் ஆண்டு தொடக்கம் 1995 வரையான காலப்பகுதி

துடுப்பாட்ட பாணி வலதுகை துடுப்பாட்டம்

விளையாடும் பாணிதுடுப்பாட்ட வீரர்

உறவுகள்ஜெப் க்ரோ (சகோதரர்), டேவ் க்ரோ (தந்தை)

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் 143

மொத்த ஒருநாள் ஓட்டங்கள் 4704

அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் 107*

ஒருநாள் துடுப்பாட்ட சராசரி 38.55

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் 77

மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் 5444

அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் 299

டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி 45.36

பந்துவீச்சில் பகுதி நேரமாக மித வேகப்பந்து வீசும் மார்ட்டின் க்ரோ ஒருநாள் போட்டிகளில் 32.89 என்ற பந்து வீச்சு சராசரியில் 29 விக்கட்டுகளையும் டெஸ்ட் போட்டிகளில் 48.28 என்ற பந்து வீச்சு சராசரியில் 14 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

கிரிக்கட் வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 21


செப்டம்பர் மாதம் 22ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1962ஆம் ஆண்டு – கிறிஸ் மாத்யூஸ் (அவுஸ்திரேலியா)
  • 1967ஆம் ஆண்டு – ஜொனாதன் மிழ்மொவ் (நியூசிலாந்து)
  • 1969ஆம் ஆண்டு – பிராவின் கல்வர் (அவுஸ்திரேலியா)
  • 1978ஆம் ஆண்டு – மிஹ்ராப் ஹொசைன் (பங்களாதேஷ்)
  • 1980ஆம் ஆண்டு – நிக் ஹார்ஸ்லே (நியூசிலாந்து)
  • 1985ஆம் ஆண்டு – வெய்ன் வயிட் (இங்கிலாந்து)
  • 1986ஆம் ஆண்டு – டெபாப்ரதா தாஸ் (இந்தியா)
  • 1990ஆம் ஆண்டு – ஜம்ஹர் ஹாமில்டன் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1994ஆம் ஆண்டு – ரொபி மொண்ட்கோமெரி (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்