வரலாற்றில் இன்று : ஆகஸ்ட் மாதம் 09

378
OTD-Aug-9

1983ஆம் ஆண்டுஹெமில்டன் மசகட்சா  பிறப்பு

சிம்பாப்வே கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மற்றும் முன்னாள் தலைவருமான ஹெமில்டன் மசகட்சாவின்  பிறந்த தினமாகும். தற்போதைய சிம்பாப்வே அணியில் உள்ள சிறந்த  துடுப்பாட்ட வீரரான ஹெமில்டன் மசகட்சா   சிம்பாப்வே கிரிக்கட்  அணிக்காக 2001ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது  வரையிலான 15 வருட காலப் பகுதியில் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29.84 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1731 ஓட்டங்களையும் (அதிகபட்ச ஓட்டம் 158), 168 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 28.71 என்ற துடுப்பாட்ட சராசரியில் 4680 ஓட்டங்களையும் (அதிகபட்ச ஓட்டம் 178 ஆட்டம் இழக்காமல்), 50 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 29.43 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1413 ஓட்டங்களையும் (அதிகபட்ச ஓட்டம் 93 ஆட்டம் இழக்காமல் ) பெற்றுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 8

ஆகஸ்ட்  மாதம் 09ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1897 டெட் பட்கோக் (நியூசிலாந்து)
  • 1902 எட்வர்ட் “நோபி” கிளார்க் (இங்கிலாந்து)
  • 1911 கெரஷர்ட்மெஹர் (இந்தியா)
  • 1926 டெனிஸ் எட்கின்சன் (அவுஸ்திரேலியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்