1992ஆம் ஆண்டு – முரளியின் முதலாவது டெஸ்ட்
உலக டெஸ்ட் கிரிக்கட் பந்து வீச்சாளர்களில் முதன்மையானவர் மற்றும் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய பெருமைக்குரிய முத்தையா முரளிதரன் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய நாளாகும். முரளிதரன் இன்று போல் ஒருநாளில் தான் 1992ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முரளி தனது முதல் போட்டியின் முதல் இனிங்ஸில் 1 விக்கட்டையும் 2ஆவது இனிங்ஸில் 2விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.
முரளி மற்றும் முரளியின் டெஸ்ட் வாழ்க்கை
- முழுப் பெயர் – முத்தையா முரளிதரன்
- பிறப்பு – ஏப்ரல் 17, 1972
- பிறந்த இடம் – கண்டி
- வயது – 44
- கல்வி – செயின்ட் அந்தோணி கல்லூரி, கண்டி
- உயரம் – 5 அடி 7 அங்குலம்
- விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 133
- விக்கட்டுகள் – 800
- வீசிய பந்துகள் – 44039
- கொடுத்த ஓட்டங்கள் – 18180
- பந்து வீச்சு சராசரி – 23.08
- சிறந்த பந்து வீச்சு – 51/9
- போட்டியில் 4 விக்கட்டுகள் – 45
- போட்டியில் 5 விக்கட்டுகள் – 67
வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 26
1983ஆம் ஆண்டு – லசித் மலிங்க பிறப்பு
இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்காவின் பிறந்த தினமாகும்.
- முழுப் பெயர் : சபரமடு லசித் மலிங்க
- பிறப்பு : 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்ஆ 28ம் திகதி
- பிறந்த இடம் : காலி
- வயது : 33
- மறு பெயர் – சபரமடு லசித் மலிங்க ஸ்வரஞ்சித்
- விளையாடும் காலப்பகுதி : 2004ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை
- பந்து வீச்சு பாணி : வலதுகை வேகப் பந்து வீச்சு
- விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 191
- கைப்பற்றியுள்ள விக்கட்டுகள் – 291
- வீசிய பந்துகள் – 9207
- கொடுத்த ஓட்டங்கள் – 8082
- பந்து வீச்சு சராசரி – 27.77
- சிறந்த பந்து வீச்சு – 38/6
- விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 30
- கைப்பற்றியுள்ள விக்கட்டுகள் – 101
- வீசிய பந்துகள் – 5209
- கொடுத்த ஓட்டங்கள் – 3349
- பந்து வீச்சு சராசரி – 33.15
- சிறந்த பந்து வீச்சு – 50/5
- விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 62
- கைப்பற்றியுள்ள விக்கட்டுகள் – 78
- வீசிய பந்துகள் – 1307
- கொடுத்த ஓட்டங்கள் – 1582
- பந்து வீச்சு சராசரி – 20.28
- சிறந்த பந்து வீச்சு – 31/5
வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 27
2005ஆம் ஆண்டு – இங்கிலாந்தின் பிரசித்தமான வெற்றி
அவுஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகள் மோதிய ஏஷஸ் தொடரின் 4ஆவது போட்டி நோட்டிங்ஹம் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து – 477/10
எண்டுரூ பிளின்டொப் 102, கெயின்ட் ஜோன்ஸ் 85, மார்கஸ் ட்ரிஸ்கோர்த்திக் 65 – ஷேன் வோர்ன் 102/4, ஷோன் டயிட் 97/3
அவுஸ்திரேலியா – 218/10
சைமன் கெட்டிச் 45, பிரெட் லீ 47, மைக்கல் கிளார்க் 36 – சைமன் ஜோன்ஸ் 44/5, மெத்திவ் ஹோகார்ட் 70/3
அவுஸ்ரேலியா – 387/10 (Follow on)
ஜெஸ்டின் லெங்கர் 61, சைமன் கெட்டிச் 59, மைக்கல் கிளார்க் 56, ஷேன் வோர்ன் 45 – ஸ்டீவ் ஹார்மேசன் 93/3, மெத்திவ் ஹோகார்ட் 72/2
இங்கிலாந்து – 129/7
எண்டுரூ பிளின்டொப் 26, மார்கஸ் ட்ரிஸ்கோர்த்திக் 27, கெவின் பீட்டர்சன் 23 – ஷேன் வோர்ன் 31/4, பிரெட் லீ 51/3
இங்கிலாந்து அணி 3 விக்கட்டுகளால் வெற்றி
ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1905 சிறில் வால்டர்ஸ் (இங்கிலாந்து)
- 1948 முர்ரே பார்க்கர் (நியூசிலாந்து)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்