2015ஆம் ஆண்டு – குமார் சங்கக்கார டெஸ்ட்டில் இருந்து ஓய்வு
இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர இடதுகைத் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிய நாளாகும். இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் இந்திய அணி 278 ஓட்டங்களால் வெற்றி பெற்று இருந்தது. தனது இறுதிப் போட்டியின் முதல் இனிங்ஸில் குமார் சங்கக்கார 32 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்ஸில் 18 ஓட்டங்களையும் பெற்று இருந்தார்.
போட்டியின் சுருக்கம்
இந்தியா 393/10
லோகேஷ் ராஹுல் 108, ரோஹித் ஷர்மா 79, விராத் கோஹ்லி 78
ரங்கன ஹேரத் 78/4, எஞ்சலோ மெதிவ்ஸ் 24/2, துஷ்மந்த சமீர 72/2
இலங்கை 306/10
எஞ்சலோ மெதிவ்ஸ் 102, லஹிரு திரிமான்ன 62, கௌஷல் சில்வா 51
அமித் மிஸ்ரா 43/4, இஷாந்த் ஷர்மா 68/2, ரவி அஷ்வின் 76/2
இந்தியா 325/8d
அஜின்கியா ரஹானே 126, முரளி விஜே 82, ரோஹித் ஷர்மா 34
தம்மிக்க பிரசாத் 43/4, தரிந்து கௌஷல் 118/4
இலங்கை 134/10
குமார் சங்கக்கார 18, எஞ்சலோ மெதிவ்ஸ் 23, திமுத் கருணாரத்ன 46
ரவி அஷ்வின் 42/5, அமித் மிஸ்ரா 29/3
இந்திய அணி 278 ஓட்டங்களால் வெற்றி
டெஸ்ட் கிரிக்கட் உலகில் குமார் சங்கக்கார
விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 134
துடுப்பாடிய இனிங்ஸ்கள் – 233
அறிமுக டெஸ்ட் போட்டி – தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக 2000ஆம் ஆண்டு
பெற்ற மொத்த ஓட்டங்கள் – 12,400 (100/50 – 38/52)
அதிகப்பட்ச ஓட்டம் – 319
துடுப்பாட்ட சராசரி – 57.40
பந்துவீச்சில் குமார் சங்கக்கார 84 பந்துகளை வீசி உளள்தோடு விக்கட்டுகள் எதையும் கைப்பற்றியது இல்லை. அத்தோடு விக்கட் காப்பாளராக செயற்பட்டுள்ள குமார் சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் 182 பிடிகளை பிடித்துள்ளதோடு 20 ஸ்டம்பிங்களை செய்துள்ளார்.
1971ஆம் ஆண்டு – இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி
1971ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. லண்டன் ஓவல் மைதானத்தில் இடம் பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து 355/10
ஜோன் ஜம்சன் 82, எலன் நொட் 90, ரிச்சர்ட் ஹட்டன் 81
ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் 63/2, பகவத் சந்திரசேகர் 76/2
இந்தியா 284/10
பாருக் இன்ஜினீர் 59, திலிப் சர்தேசாய் 54, அஜித் வடேகர் 48
ராய் இல்லிங்க்வோர்த் 70/5, ஜொஹன் ஸ்நொவ் 68/2
இங்கிலாந்து 101/10
பிரையன் லக்ஹாஸ்ட் 33, பசில் டி ஒலிவேரா 17, ஜோன் ஜம்சன் 16
பகவத் சந்திரசேகர் 38/6, ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் 44/2
இந்தியா 174/6
அஜித் வடேகர் 45, திலிப் சர்தேசாய் 40, குண்டப்பா விஸ்வநாத் 33
டெரெக் அண்டர்வூட் 72/3
இந்திய அணி 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்று தமது டெஸ்ட் வரலாற்றில் 1ஆவது வெற்றியை பதிவு செய்தது.
1973ஆம் ஆண்டு – கெரி சோபர்ஸின் இறுதி சதம்
1973ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஆகிய அணிகள் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் பலப் பரீட்சை நடாத்தின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 652 ஓட்டங்களைப் பெற்று தமது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. இதில் கெரி சோபர்ஸ் ஆட்டம் இழக்காமல் 150 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரது 26ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் சதமாக அமைந்து இருந்தது.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 23
ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1851 டாம் கெண்டல் (அவுஸ்திரேலியா)
- 1909 ரோனி க்ரிவ்சோன் (தென் ஆபிரிக்கா)
- 1959 அட்ரியன் குயி (தென் ஆபிரிக்கா)
- 1985 ஃபார்ஸ்டர் முட்சிவா (சிம்பாப்வே)
- 1987 டெரிக் பிரேக்மண் (பெர்முடா)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்