வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் மாதம் 15

439
OTD-Aug-15

2015ஆம் ஆண்டுசந்திமாலின் சதம், இலங்கை வெற்றி

2015ஆம் ஆண்டு இந்திய கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

இந்தத் தொடரின் 1ஆவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம் பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தமது முதல் இனிங்ஸில் ரவி அஷ்வினின் அபார பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பின் இந்திய அணி தமது முதல் இனிங்ஸில் ஷீகர் தவான் மற்றும் விராத் கொஹ்லியின் சதத்தின் உதவியோடு 375 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 192 ஓட்டங்கள் பின்னிலையில் தமது 2ஆவது இனிங்ஸில் ஆடிய இலங்கை அணி தினேஷ் சந்திமாலின் அருமையான 162 ஓட்டங்களின் உதவியுடன் 367 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் மூலம் இந்திய அணிக்கு 176 என்ற சிறிய வெற்றி இலக்கே நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இந்திய அணி இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ரங்கன ஹேரத்தின் மந்திர சுழற்பந்துக்கு முகம் கொடுக்க முடியாமல் 112 ஓட்டங்களுக்கு சுருண்டு விழுந்தது.

இலங்கை அணியின் ரங்கன ஹேரத் 7 விக்கட்டுகளையும், தரிந்து கௌஷால் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இறுதியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.

அத்தோடு இந்த போட்டியில் தான் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார இறுதியாக காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் விளையாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 14

ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1927 எடி லீட்பீட்டர் (இங்கிலாந்து)
  • 1934 ரெக் ஸ்கார்லெட் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1951 ரஞ்சன் குணதிலக (இலங்கை)
  • 1975 விஜய் பரத்வாஜ் (இந்தியா)
  • 1975 ஹேமலத  கலா (இந்தியா)
  • 1980 அதில்ராஜா (நெதர்லாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்