வரலாற்றில் இன்று : ஆகஸ்ட் மாதம் 12

411
OTD-Aug-12

1956ஆம் ஆண்டுசித்தார்த் வெத்தமுனி பிறப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சிறந்த துடுப்பாட்ட வீரர் சித்தார்த் வெத்தமுனியின் பிறந்த தினமாகும்.

டெஸ்ட் போட்டி ஒன்றில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த இலங்கை வீரர்களில் ஒருவரான இவர் 1982ஆம் ஆண்டு தொடக்கம் 1987ஆம் ஆண்டு வரையிலான 05 வருட காலப்பகுதியில் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29.07 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1221 ஓட்டங்களையும் (அதிகபட்ச ஓட்டம் 190) 35 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 24.56 என்ற துடுப்பாட்ட சராசரியில் 786 ஓட்டங்களையும் (அதிகபட்ச ஓட்டம் 86 ஆட்டம் இழக்காமல்) பெற்றுள்ளார்.

1997ஆம் ஆண்டுஜயசூரிய 199

1997ஆம் ஆண்டு கொழும்பு .எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய 199 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் 199 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்த 8ஆவது வீரர் என்ற பெயரை சனத் ஜயசூரிய பெற்றார்.

இவரோடு முதஸர் நாசர், முகமது அசாருதீன், மத்தேயு எலியட், ஸ்டீவ் வாஹ், யூனிஸ் கான், இயான் பெல் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் 199 ஓட்டங்களோடு டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆட்டம் இழந்து இருந்தனர்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 11

ஆகஸ்ட்  மாதம் 12ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1899 பென் சேலே (மேற்கிந்திய தீவுகள்)
  • 1940 எட்டி பார்லோ (தென் ஆபிரிக்கா)
  • 1960 கிரேக் தோமஸ் (இங்கிலாந்து)
  • 1961 மார்க் பட் (நியூசிலாந்து)
  • 1969 ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1972 ஞானேந்திரா பாண்டே (இந்தியா)
  • 1976 பெட்ரோ கொலின்ஸ் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1987 கோர்டன் கௌடி (ஸ்காட்லாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்