2005ஆம் ஆண்டு – ஷேன் வோர்னின் புதிய மைல்கல்
அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய ஏஷஸ் கிண்ணத் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் அமைந்துள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இடம்பெற்றது.
இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக மார்கஸ் ட்ரிஸ்கொர்திக் மற்றும் எண்டுரூ ஸ்ட்ரோஸ் ஆகியோர் களமிறங்கினார்கள்.
இதில் மார்கஸ் ட்ரிஸ்கொர்திக் சிறப்பாக ஆடி 63 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஷேன் வோர்ன் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார்.
இந்த விக்கட்டை ஷேன் வோர்ன் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் 600 விக்கட்டுகளைக் கைப்பற்றிய முதலாவது வீரர் என்ற பெருமையை ஷேன் வோர்ன் பெற்றார்.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 10
ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1855 டிக் பில்லிங் (இங்கிலாந்து)
- 1855 ஜான் ஹோட்ஜஸ் (அவுஸ்திரேலியா)
- 1892 ஆர்ச்சி வில்ஸ் (மேற்கிந்திய தீவுகள்)
- 1907 டெட் பெக்கட் (அவுஸ்திரேலியா)
- 1910 டெனிஸ் மொலோனி (நியூசிலாந்து)
- 1954 எம்.வி. நரசிம்ம ராவ் (இந்தியா)
- 1962 ஷாஹுல் கர்னயின் (இலங்கை)
- 1972 மெல் ஜோன்ஸ் (அவுஸ்திரேலியா)
- 1989 வீரசாமி பேர்முல் (மேற்கிந்திய தீவுகள்)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்