1969ஆம் க்ரெஹெம் த்ரோப் பிறப்பு
இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் க்ரெஹெம் த்ரோப்பின் பிறந்த தினமாகும்.
ஸ்டம்பி என்ற புனைப்பெயரைக் கொண்ட இடதுகைத் துடுப்பாட்ட வீரரான க்ரெஹெம் த்ரோப் இங்கிலாந்து அணிக்காக 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரையிலான 12 வருட காலப் பகுதியில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44.66 என்ற துடுப்பாட்ட சராசரியில் 6744 ஓட்டங்களையும் ( அதிக ஓட்டம் ஆட்டம் இழக்காமல் 200), 82 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 37.18 என்ற துடுப்பாட்ட சராசரியில் 2380 ஓட்டங்களையும் ( அதிக ஓட்டம் 89) பெற்றுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
1856 ஜார்ஜ் கோல்ட்ஹார்ட் (அவுஸ்திரேலியா)
1857 ஜான் ஹாரி (அவுஸ்திரேலியா)
1900 ஓட்டோ நதலிங் (அவுஸ்திரேலியா)
1940 மேர்வின் கிச்சன் (இங்கிலாந்து)
1961 மைக் வாட்கின்சன் (இங்கிலாந்து)
1966 கணேஷ் மயில்வாகனம் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்)
1972 மக்ஸூட் ராணா (பாக்கிஸ்தான்)
1973 பென் ஜான்சன் (அவுஸ்திரேலியா)