1955ஆம் ஆண்டு – உலக சாதனை இணைப்பாட்டம்
1955ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி முதல் இனிங்ஸில் 668 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடிய போது 147 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது. அப்பொது ஜோடி சேர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டெனிஸ் எட்கின்சன் மற்றும் விக்கட் காப்பாளர் டெபெசா ஆகியோர் 7ஆவது விக்கட்டுக்காக 347 ஓட்டங்களை பகிர்ந்தார்கள். இது டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் 7ஆவது விக்கட்டுக்காக பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்களாகும். இது இடம்பெற்று தற்போது வரை 61 வருடங்கள் கடந்தும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.
வரலாற்றில் நேற்றைய நாள் : மே மாதம் 17
மே மாதம் 18ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
1925 நைஜல் ஹோவர்ட் (இங்கிலாந்து)
1959 க்ரெஹெம் டில்லெ (இங்கிலாந்து)
1970 கார்ல் டகெட் (மேற்கிந்திய தீவுகள்)
1972 அமே குரஷிய (இந்தியா)
1985 டேவிட் வயிஸ் (தென் ஆபிரிக்கா)
1989 ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி (இந்தியா)
1993 சந்திப் ஷர்மா (இந்தியா)
1995 சத்மன் இஸ்லாம் (பங்களாதேஷ்)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்