1972ஆம் ஆண்டு – உபுல் சந்தன பிறப்பு
முன்னால் இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் உபுல் சந்தனவின் 44வது பிறந்த தினமாகும். இலங்கை அணிக்காக 1994 தொடக்கம் 2007 வரையான காலப்பகுதியில் 16 டெஸ்ட் போட்டிகளிலும் 147 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
1930ஆம் ஆண்டு – துலிப்பின் 333
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் துலிப் உள்ளூர் கவுண்டி போட்டி ஒன்றில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி நோர்தன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 மணித்தியாலங்களில் 333 ஓட்டங்களைக் குவித்தார். கிரிக்கட் வரலாற்றில் 3 துடுப்பாட்ட வீரர்கள் தான் ஒரு நாளில் அதிகமான ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற பட்டியலில் உள்ளனர். அதில் மேற்கிந்திய அணியின் ப்ரயின் லாரா முதல் இடத்தில் உள்ளார். அவர் ஒரு நாளில் பெற்ற ஓட்ட எண்ணிக்கை 390*.
வரலாற்றில் நேற்றைய நாள் – மே 06
மே மாதம் 07ஆம் திகதியில் பிறந்த வேறு வீரர்கள்
1941 கிரஹாம் பில்பி (நியுசிலாந்து)
1955 கரேன் ப்ரைஸ் (அவுஸ்திரேலியா)
1966 எண்டர்சன் கம்மின்ஸ் (மேற்கிந்திய தீவுகள்)
1975 ஆஷ்லே கோவன் (இங்கிலாந்து)
1979 ஜொன் கென்ட் (தென் ஆபிரிக்கா)
1980 ஜீதன் பட்டேல் (நியுசிலாந்து)
1982 காசிர் அப்பாஸ் (பாகிஸ்தான்)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்