1999ஆம் ஆண்டு – அதிஷ்ட வெற்றி
1999ஆம் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் 2ஆவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்ஹேம் நகரில் அமைந்துள்ள எட்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை தென் ஆபிரிக்கா அணி எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது. அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 214 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா அணி 49.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்களையே பெற்றது. இதனால் போட்டி சமநிலை பெற்றது. இறுதியில் முன்னைய சுப்பர் சிக்ஸ் நிலை போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியின் புள்ளி வீதம் தென் ஆபிரிக்காவை விட சிறப்பாகக் காணப்பட்டதால் இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது. இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருந்ததோடு இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை 8 விக்கட்டுகளால் வெற்றிகொண்டு சம்பியனானது.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 16
ஜூன் மாதம் 17ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1902 அலெக் ஹர்வூட் (அவுஸ்திரேலியா)
- 1956 நிக் குக் (இங்கிலாந்து)
- 1964 ஸ்டீவ் ரோட்ஸ் (இங்கிலாந்து)
- 1981 ஷேன் வொட்சன் (அவுஸ்திரேலியா)
- 1984 அசாத் பதான் (இந்தியா)
- 1986 ஸ்டீவ் டேவிஸ் (இங்கிலாந்து)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்