ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் சுபர் சிக்ஸ் சுற்றுப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீச தவறிய ஓமான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுபர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் ஜிம்பாப்வே மற்றும் ஓமான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.
>>இலங்கை ஒருநாள் அணியில் இணையும் டில்சான் மதுசங்க<<
இந்தப் போட்டியில் முதலில் பந்துவீசிய ஓமான் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் 2 ஓவர்களை வீச தவறியுள்ளது. ஐசிசியின் விதிமுறைப்படி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் ஒரு ஓவரை வீச தவறும் பட்சத்தில் அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
எனவே 2 ஓவர்களை நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் வீசத் தவறிய ஓமான் அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஓமான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் கலீமுல்லாவுக்கு ஐசிசி ஒரு தரமிறக்கல் புள்ளியை தண்டனையாக வழங்கியுள்ளது. ஜிம்பாப்வே அணியின் தலைவர் கிரைக் எர்வினை ஆட்டமிழக்கச் செய்த பின்னர், தவறான முறையில் வழியனுப்பி வைத்த குற்றச்சாட்டுக்காக இவருக்கு இந்த தரமிறக்கல் புள்ளி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<