எட்டாவது முறையாக நடைபெற்ற மூத்த கால்பந்து வீரர்களுக்கான திலக் பீரிஸ் சவால் கிண்ணத்தை ஓல்ட் பென்ஸ் (மூத்த வீரர்கள்) அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் கைப்பற்றியது. குரே பார்க் மைதானத்தில் சனிக்கிழமை (28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஓல்ட் பென்ஸ் அணி கேகாலை மூத்த வீரர்களை 4-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது.
இலங்கை சொக்கர் மாஸ்டர்ஸ் சங்கம் (SLSMA) இந்த போட்டித் தொடரை ஏற்பாடு செய்தது.
திலக் பீரிஸ் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஒல்ட் பென்ஸ், கேகாலை வெடரென்ஸ் அணிகள்
எட்டாவது தடவையாக இடம்பெறும் முன்னாள்..
பெரும் எதிர்பார்ப்போடு களமிறங்கிய கேகாலை மூத்த வீரர்கள் அணி துரதிஷ்டவசமாக ஐந்து கோல் வாய்ப்புகளை தவறவிட்ட நிலையிலேயே இறுதிப் போட்டியில் ஒரு கோல் கூட புகுத்தவில்லை. மறுபுறம் ஓல்ட் பென்ஸ் மூத்த வீரர்கள் அணி கிடைத்த வாய்ப்புகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு எந்த சவாலும் இன்றி கோல்களை போட்டது.
ஓல்ட் பென்ஸ் அணி 5 நிமிடங்களுக்குள் A.B. நாதர் மூலம் 2 கோல்களை போட்டதன் மூலம் முதல் பாதியில் கேகாலை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.
32 ஆவது நிமிடத்தில் ரொஷான் ரமீஸ் உயர பரிமாற்றிய பந்தை நாதர் எதிர்பாராத விதமாக தலையால் முட்டி கோலாக்கினார். மேலும் ஐந்து நிமிட நேரத்தில் சிசிர பெரேரா பரிமாற்றிய பந்தை பெற்ற நாதர் இரண்டாவது கோலை புகுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த 12 நிமிடங்களில் கேகாலை மூத்த வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியபோதும் ஓல்ட் பென்ஸ் வீரர்களின் பிடிவாதமான தற்காப்பு அட்டத்தின் முன் கோல் பெற முடிவயில்லை. சில பந்துகளை கோல் காப்பாளர் ஜோன்சான் சிறப்பான முறையில் தடுத்தார்.
எவ்வாறாயினும் 54 ஆவது நிமிடத்தில் ஓல்ட் பென்ஸ் மூத்த வீரர்கள் மூன்றாவது கோலையும் புகுத்தினர். இதன்போது நிஷான்த பெர்னாண்டோவிடம் இருந்து பந்தை பெற்ற S. பாலேந்திரன் அதனை தலையால் முட்டி கோலாக்கினார். 12 நிமிடங்களின் பின் பாலேந்திரனின் உதவியுடன் சம்பத் பெரேரா ஓல்ட் பென்ஸ் அணிக்காக மற்றொரு கோலை போட்டார்.
இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனை எதிர்கொள்ளவுள்ள யாழ் பத்திரிசியார்
இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம்..
ஓல்ட் பென்ஸ் மூத்த அணியின் தலைவர் T. ஜோன்சன் சிறந்த கோல் காப்பாளருக்கான தங்க கையுறையை வென்றதோடு அவரது அணியின் A.B. நாதர் சிறந்த வீரருக்கான தங்க பாதணியை வென்றார். இருவரும் தலா 10,000 ரூபாய் பணப்பரிசையும் வென்றனர்.
சம்பியன் அணியான ஓல்ட் பென்ஸ் மூத்த அணிக்கு திலக் பீரிஸ் சவால் கிண்ணத்துடன் பதக்கங்கள் மற்றும் 100,000 ரூபாய் பணப்பரிசும் இரண்டாவது இடத்தை பிடித்த கேகாலை மூத்த வீரர்களுக்கு கிண்ணத்துடன், பதக்கங்கள் மற்றும் 50,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பங்கேற்ற இலங்கை அணியின் முன்னாள் கோல் காப்பாளரும் ஜுபிடர் விளையாட்டு கழகத்தின் தலைவருமான பெர்னார்ட் சில்வா, இலங்கை சொக்கர் மாஸ்டர்ஸ் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான திலக் பீரிசுடன் இணைந்து பரிசில்களை வழங்கினார். இலங்கை சொக்கர் மாஸ்டர்ஸ் சங்கமே இந்த போட்டிக்கு அனுசரணையையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.