சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பன எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவிருந்தன.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி விளையாடவுள்ள டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கானதாக இருந்தாலும், ஒருநாள் தொடர் ஐசிசி சுபர் லீக்கில் இடம்பெறவில்லை.
>>இங்கிலாந்தில் இரட்டைச் சதமடித்த இலங்கையின் இளம் வீரர்
அதேநேரம், இலங்கை அணி ஜூன் மாதத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளதுடன், ஆகஸ்ட் மாதம் லங்கா பிரீமியர் லீக் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசியக்கிண்ணம் மற்றும் T20 உலகக்கிண்ணம் போன்ற தொடர்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளன.
எனவே, ஐசிசி சுபர் லீக் அல்லாத பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை தங்களுடைய போட்டி அட்டவணையிலிருந்து நீக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக மூன்று ஒருநாள் போட்டிகள் இல்லாமல், இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இறுதியாக 2019ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததுடன், தொடரை 1-0 என இழந்திருந்து.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியானது, இம்மாதம் 15ம் திகதி பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<