இலங்கை அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. இந்தத் தொடர் 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளை உள்ளடக்கியது.
இதில் ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகள் முடிவுற்றுள்ளதோடு நாளை 3ஆவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
அதன் பின் இலங்கை அணி 16ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் அயர்லாந்து அணியோடு 2 ஒருநாள் போட்டிகளிலும் அதன் பின் ஜூன் 21 முதல் இங்கிலாந்து அணியோடு 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
இந்த ஒருநாள் குழாமில் இலங்கை அணியில் தனுஷ்க குணதிலக, பர்பீஸ் மஹ்ரூப், சீகுகே பிரசன்ன, சுராஜ் ரந்திவ் மற்றும் உபுல் தரங்க ஆகிய வீரர்கள் இணைக்கப்படவுள்ளார்கள். ஒருநாள் தொடரில் பங்குபெறும் 15 பேர் அடங்கிய இறுதிக் குழாம் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு இலங்கை “ஏ” அணியும், இங்கிலாந்து “ஏ” அணியுடன் 4 நாட்கள் கொண்ட போட்டியிலும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளன. அவிஷ்க குணவர்தனவின் பயிற்சியின் கீழ் இந்த அணி ஜூன் மாதம் 22ஆம் திகதி இங்கிலாந்து நோக்கிச் செல்லவுள்ளதோடு தனது முதல் போட்டியில் ஜூன் மாதம் 26ஆம் திகதி விளையாடவுள்ளது.
4 நாட்கள் போட்டிக்கான இலங்கை “ஏ” குழாம்
1. அஷான் பிரியன்ஜன் – (தலைவர்)
2. மஹேல உடவத்த
3. உதார ஜயசுந்தர
4. மாதவ வர்ணபுர
5. நிரோஷன் திக்வெல்ல
6. ரொசான் சில்வா
7. எஞ்சலொ பெரேரா
8. மினோத் பனுக
9. சரித் அசலன்க
10. சசித் பத்திரண
11. லஹிரு கமகே
12. கசுன் ராஜித
13. விஷ்வ பெர்னாண்டோ
14. அசிதபெர்னாண்டோ
15. ரமித் ரம்புக்வெல்ல
16. பிரபாத் ஜயசூரிய
ஒருநாள் போட்டிக்கான இலங்கை “ஏ” குழாம்
1. அஷான் பிரியன்ஜன் – (தலைவர்
2. மஹேல உடவத்த
3. உதார ஜயசுந்தர
4. பானுக ராஜபக்ஷ
5. நிரோஷன் திக்வெல்ல
6. கித்ருவன் விதானகே
7. எஞ்சலொ பெரேரா
8. மினோத் பனுக
9. சரித் அசலன்க
10. சசித் பத்திரண
11. திசர பெரேரா
12. லஹிரு கமகே
13. கசுன் ராஜித
14. முஹமத் தில்ஷாத்
15. அசித்த பெர்னாண்டோ
16. ரமித் ரம்புக்வெல்ல
17. லக்ஷான் சந்தகன்
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்