ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

ICC ODI World Cup 2023

247

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய நியூசிலாந்து கிரிக்கெட் குழாமானது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சாதனை வெற்றியுடன் பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் அணி

கேன் வில்லியம்சன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து குழாத்தில் வேகப்பந்துவீச்சாளர்களான கைல் ஜேமிசன், அடம் மில்னே ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் வீரர் ஒப்பந்தத்திற்குள் அடங்காத வீரர்களான ட்ரென்ட் போல்ட் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது 

இதேவேளை அணியின் வேகப்பந்துவீச்சினை பலப்படுத்தும் வீரர்களாக ட்ரென்ட் போல்ட் உடன் டிம் சௌத்தி, லோக்கி பெர்குஸன் மற்றும் மேட் ஹென்ரி ஆகிய வீரர்கள் காணப்பட சகலதுறைவீரர்களான டேரைல் மிச்சல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாக மேலதிக நம்பிக்கை தருகின்றனர். அதேநேரம் உபாதைக்குள்ளான சுழல்பந்து சகலதுறைவீரர் மைக்கல் பிரஸ்வெல் உலகக் கிண்ணத்தில் ஆடும் வாய்ப்பினை இழக்கின்றார் 

இதேநேரம் உலகக் கிண்ண குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் கேன் வில்லியம்சன் உபாதை ஒன்றில் இருந்து தேறி வரும் நிலையில் கேன் வில்லியம்சனிற்குப் பதிலாக டொம் லேதம் நியூசிலாந்து குழாத்தினை வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது 

இந்திய வம்சவாளியினைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா உம் நியூசிலாந்தின் உலகக் கிண்ண குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்க நியூசிலாந்து உலகக் கிண்ண குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் ஏனைய வீரர்களான கிளன் பிலிப்ஸ், டெவோன் கொன்வெய், டேரைல் மிச்சல் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகிய வீரர்களும் முதன் முறையாக ஒருநாள் உலகக் கிண்ணம் ஒன்றில் நியூசிலாந்தினை பிரதிநிதித்துவம் செய்கின்ற வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர் 

இலங்கை – மே.தீவுகள் இளையோர் போட்டி சமனிலையில் முடிவு

நியூசிலாந்து அணி உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டியில் உலகக் கிண்ண நடப்புச் சம்பியன்களாக காணப்படும் இங்கிலாந்து அணியை ஒக்டோபர் 05ஆம் திகதி அஹமதாபாத் மைதானத்தில் வைத்து எதிர்கொள்கின்றது 

நியூசிலாந்து குழாம் 

கேன் வில்லியம்சன் (தலைவர்), ட்ரென்ட் போல்ட், மார்க் சப்மன், டெவோன் கொன்வெய், லோக்கி பெர்குஸன், மேட் ஹென்ரி, டொம் லேதம் (பிரதி தலைவர்), டேரைல் மிச்சல், ஜிம்மி நீஷம், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிச்சல் சான்ட்னர், இஸ் சோதி, டிம் சௌத்தி, வில் யங் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<