2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இங்கிலாந்து அணி நியுசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையில் ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியைப் பகல்-இரவாக மின்னொளியின் கீழ் நடத்த நியுசிலாந்து கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.
நியுசிலாந்து கிரிக்கட் சபை அடுத்த 2 ஆண்டுகளுக்கு தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடவிருக்கும் அணிகளின் சுற்றுப்பயண விவரத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி நவம்பர் மாதம் 17ஆம் திகதி தொடக்கம் பாகிஸ்தான் அணி நியுசிலாந்துக்கு சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அந்தப் போட்டிகள் கிறிஸ்ட்சர்ச், மற்றும் ஹமில்டன் மைதானங்களில் நடைபெறவுள்ளது.
சன்ரயிசஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் வோர்னர்
அதன் பிறகு பங்களாதேஷ் , அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளும் அங்கு செல்கின்றன.
இதைத் தொடர்ந்து 2017-18-ம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கிந்தியத் தீவுகள் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் நியூசிலாந்துக்குப் பயணிக்க இருக்கின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஒரு டெஸ்ட் போட்டியைப் பகல்–இரவாக மின்னொளியின் கீழ் நடத்த நியுசிலாந்து கிரிக்கெட் சபை உத்தேசித்துள்ளது. இது தொடர்பாக நியுசிலாந்து கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி டேவிட் வயிட் கூறும்போது, ‘இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது, ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானத்தில் பகல்–இரவு டெஸ்ட் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பகல்–இரவு டெஸ்ட் போட்டியை நடத்த மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். அது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம்’என்று கூறியுள்ளார்.
அடுத்த 2 ஆண்டுகளில் நியுசிலாந்து மண்ணில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும் அணிகளின் போட்டி விபரம்
2016-2017
பாகிஸ்தான் – 2 டெஸ்ட் (நவம்பர் மாதம்)
பங்களாதேஷ் – 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் (டிசம்பர் மாதம்)
அவுஸ்திரேலியா – 3 ஒருநாள் போட்டி (ஜனவரி மாதம்)
தென் ஆபிரிக்கா – 5 ஒருநாள், 1 டி20 மற்றும் 3 டெஸ்ட் (பெப்ரவரி மாதம்)
2017-2018
மேற்கிந்திய தீவுகள் – 5 ஒருநாள், 1 டி20 மற்றும் 3 டெஸ்ட்
பாகிஸ்தான் – 5 ஒருநாள் மற்றும் 3 டி20
அவுஸ்திரேலியா – 3 ஒருநாள் போட்டி
இங்கிலாந்து – 5 ஒருநாள்,1 டி20 மற்றும் 2 டெஸ்ட்
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்