உகண்டா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20 தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை கிரிக்கெட் அபிவிருத்தி குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தின் தலைவராக இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள இளம் துடுப்பாட்ட வீரர் நுவனிது பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
>>ஒரு மாற்றத்துடன் ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை அணி<<
நுவனிது பெர்னாண்டோவுக்கு அடுத்தப்படியாக இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அஷேன் பண்டார அணியில் இடம்பெற்றுள்ளார். இவர்களையடுத்து இலங்கை இளையோர் அணி வீரர்களான தினுர கலுபான மற்றும் மல்ஷ தருபதி ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இதேவேளை தமிழ்பேசும் வீரரான மொஹமட் சமாஸ் இலங்கை கிரிக்கெட் அபிவிருத்தி குழாத்தில் இடம்பெற்றுள்ளார். விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான மொஹமட் சமாஸ் உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.
உகண்டா மற்றும் இலங்கை கிரிக்கெட் அபிவிருத்தி குழாம் அணிகளுக்கு இடையில் 7 T20 போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அபிவிருத்தி குழாம்
நுவனிது பெர்னாண்டோ (தலைவர்), தினுர கலுபான, மல்ஷ தருபதி, கிரிஷான் சஞ்சுல, அஷேன் பண்டார, மொஹமட் சமாஸ், டொவின் சுபாசிங்க, மித்துன் ஜயவிக்ரம, கவிந்து நதீஷன், இசித விஜேசுந்தர, நிபுன் பிரேமரத்ன, தரிந்து ரத்நாயக்க, அயன சிறிவர்தன, சமிந்து விஜேசிங்க, தனால் ஹேமந்த
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<