ஐ.சி.சி.யின் மூன்று வகையான ஊழல் தடுப்பு விதிகளை மீறி இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளருமான நுவன் சொய்ஸா மீது சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ICC) குற்றம் சுமத்தியுள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:
- சரத்து 2.1.1 – சர்வதேச போட்டி ஒன்றின்போது தரப்பு ஒன்று நிர்ணயிக்க அல்லது திட்டமிட அல்லது போட்டியில் முறையற்ற முடிவு, முன்னேற்றம், நடத்தை அல்லது ஏனைய அம்சங்களில் செல்வாக்கு செலுத்த முயற்சித்தல்.
- சரத்து 2.1.4 – விதிமுறை சரத்து 2.1.1 இனை மீறும் வகையில் வீரர்களை நேரடியாக அணுகல், தூண்டுதல், கவர்தல் அல்லது ஊக்குவித்தல்.
- சரத்து 2.4.4 – விதிமுறைகளின் கீழ் ஊழல் நடத்தை தொடர்பில் தன் மீதான அழைப்பு அல்லது அணுகல் பற்றி ICC இன் ஊழல் தடுப்பு பிரிவுக்கு முழு விபரத்தை வெளியிட தவறுவது.
இளம் வீரர் பத்தும் நிசங்கவுக்கு ஆபத்தில்லை
கொழும்பு, NCC மைதானத்தில் இன்று (31) நடைபெற்ற இங்கிலாந்து மற்றும்..
40 வயதான சொய்சாவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் கிரிக்கெட் தொடர்பிலான செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு இருப்பதோடு இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பதில் அளிக்க 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சொய்சா, 1997 தொடக்கம் 2007 வரை இலங்கை அணிக்காக 30 டெஸ்ட் மற்றும் 95 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடிய 170க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து 2015 இல் வேகப்பந்து பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் சபையுடன் (SLC) இணைந்த அவர் தேசிய வேகப்பந்து பயிற்சிப் பிரிவில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுடன் பணியாற்றினார்.
இம்மாத ஆரம்பத்தில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய மீதும் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டமை நினைவு கூறத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<