உலகக் கிண்ண குழாத்திலிருந்து வெளியேற்றப்படும் நுவான் பிரதீப்

ICC Men's T20 World Cup 2021

2196

இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் நுவான் பிரதீப், நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஓமான் அணிக்கு எதிரான முதல் T20 போட்டியின் போது, நுவான் பிரதீப் தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்ததுடன்,  அவரால் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமான் அணிக்கு எதிரான பயிற்சிப்போட்டியில் நுவான் பிரதீப், 2 ஓவர்கள் பந்துவீசி 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் சபை, ஏற்கனவே உபாதைக்கு முகங்கொடுத்திருந்த லஹிரு மதுஷங்கவுக்கான மாற்று வீரரை அறிவிக்கவில்லை. லஹிரு மதுஷங்க தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரின் போது, உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். எனவே, தற்போது, உலகக்கிண்ண குழாத்திலிருந்த 2 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான இறுதி குழாத்தை அறிவிப்பதற்கான கால எல்லை நாளைவரை (10) நீடிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை அணி இன்று (09) விளையாடவுள்ள ஓமான் அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டி முக்கியமான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், குறித்த இரண்டு வீரர்களும் உபாதையடைந்துள்ளதால், இலங்கை கிரிக்கெட் அணிக்கு மாற்றத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கான முதல் சுற்றில் விளையாடவுள்ள இலங்கை அணி அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<