இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் அவுஸ்திரேலியாவுடனான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான பயிற்சிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரண்டு ஓவர்கள் மாத்திரமே பந்து வீசிய பிரதீப், மைதானத்தை விட்டு வெளியேறினார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்துவீச வரவில்லை.
தீவிரமான உபாதையிலிருந்து தப்பிய குசல் மெண்டிஸ்
கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப்…
“அவுஸ்திரேலியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்கான இலங்கை குழாத்தில் அங்கம் வகித்த நுவன் பிரதீப் உபாதைக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்” என்று இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அவர் இடது தொடைப்பகுதியில் முதலாம் நிலை தசைப்பிடிப்புக்கு உள்ளாகியுள்ளார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிக் போட்டியில் பந்துவீசிக் கொண்டிருந்தபோது இந்த உபாதை எற்பட்டுள்ளது” என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதீப்புக்கு பதில் மாற்று வீரரின் பெயரை இலங்கை இன்னும் அறிவிக்கவில்லை. ஏற்னவே இலங்கை அணியில் சுரங்க லக்மால், லஹிரு குமார, துஷ்மன்த சமீர மற்றும் கசுன் ராஜித்த என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க