இலங்கை கிரிக்கட் அணியின் “இன்சுவிங்” மன்னன் என்று போற்றப்படும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.அத்தோடு அவர் குறுகிய வடிவிலான கிரிக்கட் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளார் என்று இலங்கை கிரிக்கட் சபையின் உத்தியோகபூர்வ டுவீட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தலைவர் பதவியை கொஹ்லிக்கு அளிக்க சரியான நேரம் – சாஸ்திரி
2005ஆம் ஆண்டு நியுசிலாந்து அணிக்கு எதிராக போட்டியின் போது டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் அறிமுகமான நுவன் குலசேகர 11 வருடங்களில் வெறுமனே 21 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் விளையாடியுள்ளார். அவர் விளையாடியுள்ள 21 டெஸ்ட் போட்டிகளில் 37.37 என்ற பந்துவீச்சு சராசரியில் 48 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்