தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்த ஜப்னா, கோல் அணிகள்

NSL 2023

91
NSL 2023

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) 2024ஆம் ஆண்டின் பருவத்திற்காக ஒழுங்கு செய்த தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் கோல், ஜப்னா அணிகள் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

>>மகளிர் உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு

கண்டி எதிர் கோல்

இலங்கையின் முன்னணி 5 மாவட்டங்கள் பிரதிநிதித்துவம் செய்யப்படும் இந்த தொடரில் முதல் போட்டி கோல், கண்டி அணிகள் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கில் ஆரம்பமாகியது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி அணி தடுமாறிய போதிலும் அஹான் விக்ரமசிங்க சதம் (112) விளாச அவ்வணி 9 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்கள் எடுத்தது. தனன்ஞய லக்ஷான் கோல் அணிக்காக 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கோல் அணி 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கை 4 விக்கெட்டுக்களை இழந்து அடைந்தது. கோல் அணிக்காக யசோதா லங்கா (63) மற்றும் ரவிந்து ரசன்த (56*) அரைச்சதம் விளாசினர்.

கண்டி – 259/9 (50) அஹான் விக்ரமசிங்க 112, சாமிக்க 43, தனன்ஞய லக்ஷான் 36/4

 

கோல் – 263/4 (47.3) யசோதா லங்கா 63, ரவிந்து ரசன்த 56*

 

முடிவு கோல் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

ஜப்னா எதிர் கொழும்பு

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சரித் அசலன்க தலைமையிலான கொழும்பு அணியை, ஜனித் லியனகேவின் ஜப்னா அணி 4 விக்கெட்டுக்களால் தோற்கடித்தது.

கொழும்பு அணி போட்டியில் முதலில் துடுப்பாடி 8 விக்கெட்டுக்களை இழந்து 269 ஓட்டங்கள் எடுத்தது. விஷாத் ரன்திக்க (66) மற்றும் தசுன் ஷானக்க (49) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர். ஜப்னா அணியின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளரான இசித விஜேசுந்தர 5 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

>>5 புதுமுக வீரர்களுடன் ஆஸி.யை சந்திக்கும் இங்கிலாந்து அணி

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை (270) ஜப்னா அணி 48.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 271 ஓட்டங்களுடன் அடைந்தது. சந்துன் வீரக்கொடி (73), ரொன் சந்திரகுப்தா (63) ஆகியோர் ஜப்னா அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.

போட்டியின் சுருக்கம்

 

கொழும்பு – 269/8 (50) விஷாத் ரன்திக்க 66, தசுன் ஷானக்க 49, இசித விஜேசுந்தர 60/5

 

ஜப்னா – 271/6 (47.5) சந்துன் வீரக்கொடி 73, ரொன் சந்திரகுப்தா 63, திலும் சுதீர 55/3

 

முடிவு ஜப்னா 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<