இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்து நடாத்தி வரும் தேசிய சுப்பர் லீக் (NSL) ஒருநாள் தொடரின் ஏழாம் நாள் ஆட்டத்தில் இன்று (20) இரண்டு போட்டிகள் நிறைவடைந்தன.
>>மகளிர் T20 உலக கிண்ண இலங்கை குழாம் அறிவிப்பு
கொழும்பு எதிர் தம்புள்ளை
கொழும்பு, தம்புள்ளை அணிகள் மோதிய போட்டி கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை வீரர்கள் கயான வீரசிங்கவின் அரைச்சதத்தோடு (77) 215 ஓட்டங்களை எடுத்தனர். கொழும்பு பந்துவீச்சில் திலும் சுதீர மற்றும் நிசால தாரக்க தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர். பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 216 ஓட்டங்களை கொழும்பு வீரர்கள் அடைவதில் தடுமாற்றம் காட்டிய போதிலும் இறுதியில் வெற்றி இலக்கை 43.3 ஓவர்களில் அடைந்தனர். தம்புள்ளை அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித, துஷான் ஹேமன்த ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தும் அது வீணானது.
தம்புள்ளை – 215 (43.5) கயான வீரசிங்க 77, திலும் சுதீர 27/3, நிசால தாரக்க 43/3
கொழும்பு – 219/7 (43.3) அஷேன் பண்டார 39, கசுன் ராஜித 33/2
முடிவு – கொழும்பு 3 விக்கெட்டுக்களால் வெற்றி
கண்டி எதிர் ஜப்னா
கண்டி, ஜப்னா அணிகள் இடையில் நடைபெற்ற மோதலில் ஜப்னா அணி ரொன் சந்திரகுப்தா மற்றும் சந்துன் வீரக்கொடி ஆகியோரது அதிரடி அரைச்சதங்களோடு, கண்டி அணியை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது. இதில் சந்துன் வீரக்கொடி 12 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களோடு 77 ஓட்டங்கள் எடுக்க, ரொன் சந்திரகுப்தா 38 பந்துகளில் 10 பௌண்டரிகளோடு 51 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.
கண்டி – 143 (43.3) சஹான் ஆராச்சிகே 38, கல்ஹார சேனரத்ன 32/3
ஜப்னா – 141/1 (14.1) சந்துன் வீரக்கொடி 77, ரொன் சந்திரகுப்தா 51*
முடிவு – ஜப்னா 9 விக்கெட்டுக்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<