சரித் அசலன்க அபார சதம்; கொழும்பு அணிக்கு NSL தொடரில் முதல் வெற்றி

NSL Limited Overs Tournament 2024

3
NSL Limited Overs Tournament 2024

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) 2024ஆம் ஆண்டுக்காக ஒழுங்கு செய்த தேசிய சுபர் லீக் (NSL) ஒருநாள் தொடரின் இரண்டாம் நாள் போட்டிகளில் மழையின் தாக்கம் ஏற்பட்டிருக்கின்றது.

>>இரண்டாவது டெஸ்டில் மேலும் முன்னேறிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி

தம்புள்ளை எதிர் கொழும்பு

மழையின் தாக்கம் ஏற்பட்ட கொழும்பு மற்றும் தம்புள்ளை அணிகள் இடையிலான போட்டியில் கொழும்பு வீரர்கள் 45 ஓட்டங்களால் டக்வத் லூயிஸ் முறையில் வெற்றியினைப் பதிவு செய்தனர். அத்துடன் இது கொழும்பு அணிக்கு இம்முறை NSL தொடரில் முதல் வெற்றியாகவும் மாறியது. கெத்தராம ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், கொழும்பு  அணியின் வெற்றியினை அதன் தலைவர் சரித் அசலன்க வெறும் 75 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 111 ஓட்டங்கள் பெற்று உறுதி செய்தார்.

கொழும்பு – 255/7 (38) சரித் அசலன்க 111, கிரிஷான் சஞ்சுல 38, சமிந்து விஜேசிங்க 3/48

 

தம்புள்ளை – 211 (36) ரவிந்து பெர்னாண்டோ 95, பிரமோத் மதுசான் 45/3, திலும் சுதீர 50/3

ஜப்னா எதிர் கண்டி

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஜப்னா மற்றும் கண்டி அணிகள் இடையிலான ஆட்டம் மழையினால் முடிவுகள் இன்றி கைவிடப்பட்டது. அத்துடன் போட்டியில் பங்கெடுத்த இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் கொடுக்கப்பட்டது. எனினும் இப்போட்டியில் கண்டி அணியின் துடுப்பாட்டம் 39 ஓவர்கள் நடைபெற்றதோடு அதில் அஹான் விக்ரமசிங்க (52), சாமிக்க கருணாரட்ன (64) ஆகியோர் அரைச்சதங்களை விளாசினர். ஜப்னா அணிக்காக இசித விஜேசுந்தர 4 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

கண்டி – 172/4 (39) சாமிக்க கருணாரட்ன 64*, அஹான் விக்ரமசிங்க 52*, இசித விஜேசுந்தர 36/4

 

ஜப்னா – 78/4 (15)

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<