டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியது வட கொரியா

252
AFP

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ்வருடம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போவதில்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது.

விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவாகக் கருதப்படுவது ஒலிம்பிக் விளையாட்டு விழாவகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் இறுதியாக 2016இல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.  

ஜூலை 31ஆம் திகதி தேசிய விளையாட்டுத் தினமாக பிரகடனம்

அதன்பின், 2020 டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருந்தது. எனினும், கொரோனா பாதிப்பால், போட்டிகளை ஒத்திவைக்க ஜப்பானும், சர்வதேச ஒலிம்பிக் குழுவும் நடவடிக்கை எடுத்தது

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இதற்கென அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் சிறப்பாக தயாராகி வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமது நாட்டு வீரர்களை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்புமாட்டோம் என வட கொரியா நேற்று அறிவித்துள்ளது

உலக அளவிலான கொரோனா பாதிப்பிலிருந்து தங்களது விளையாட்டு வீர, வீராங்கனைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஒத்திவைப்பு

கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழு கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அமைச்சகத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, கடந்த 1984இல் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியையும், பனிப்போருக்கு மத்தியில் 1988ஆம் ஆண்டு தென்கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளையும் புறக்கணித்த பின்னர் முதற்தடவையாக வட கொரியா ஒலிம்பிக் போட்டிகளை தவறவிடுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேவேளை, இதுதொடர்பில் தங்களிடம் அதிகாரப்பூர்வமாக வட கொரியா இன்னும் அறிவிக்கவில்லை என்று ஜப்பான் ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

இறுதியாக, கடந்த 2018ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 22 போட்டியாளர்களையும், அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களையும் வட கொரியா அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆறு இலங்கை வீரர்கள் தேர்வு

இதுஇவ்வாறிருக்க, கடந்த ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச அளவில் எந்த நாட்டுடனும் எந்தவொரு வர்த்தகமும் செய்யாமலும், யாரையும் நாட்டிற்குள் அனுமதிக்காமலும் சர்வதேச அளவில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது வடகொரியா. இதையடுத்து அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…