ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் நூர் அலி சத்ரான் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட நூர் அலி சத்ரான் அந்த அணிக்காக இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 117 ஓட்டங்களையும், 51 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1216 ஓட்டங்களையும், 23 T20i போட்டிகளில் ஆடி 597 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தனது முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியை விளையாடியபோது, அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய சத்ரான், ஸ்கொட்லாந்துக்கு எதிரான அந்தப் போட்டியில் 28 பந்துகளில் 45 ஓட்டங்களை எடுத்தார்.
அதேபோல, ஆப்கானிஸ்தான் அணி 2010இல் கனடா அணிக்கெதிராக ஆடிய 2ஆவது சர்வதேச T20i போட்டியில் தான் சத்ரான் T20i அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணம் தான் ஆப்கானிஸ்தான் அணி ஆடிய முதல் T20 உலகக் கிண்ணமாகும். இதில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சத்ரான் அரைச் சதம் அடித்து அசத்தியிருந்தார்.
- ஆப்கான் ஒருநாள் அணியில் இணையும் 3 புதுமுக வீரர்கள்
- ஆறுதல் வெற்றியுடன் இலங்கை தொடரை நிறைவு செய்த ஆப்கான்
- இலங்கை வரும் ஆப்கானிஸ்தான் A அணி!
இந்த நிலையில், அவர் கடைசியாக 2019 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாடிய பிறகு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழா T20i போட்டிகளுக்கு மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்கு அழைக்கப்பட்டார். அதில், அவர் முறையே இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக 51 மற்றும் 39 ஓட்டங்களை அடித்தார்.
இதனிடையே, கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட 35 வயதான சத்ரான், கடைசியாக அயர்லாந்துக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடியிருந்தார். எனினும், அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<