தொழில் முறை கிரிக்கெட்டை பிற்போட்ட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்

147
Ecb

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே 28ம் திகதிவரை எந்தவித தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படாது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த பருவகாலத்துக்கான உள்ளூர் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகள் அடுத்த மாதம் மத்திய பகுதியில் ஆரம்பமாகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக போட்டித் தொடர்கள் அனைத்தும் திகதிகள் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளன.

உமர் அக்மல் மீது சூதாட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் மீது அந்நாட்டு கிரிக்கெட் சபை

அதேநேரம், அடுத்த மாதம் ஆரம்பமாகவிருந்த உள்ளூர் போட்டிகள் எதிர்வரும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணைகள் திருத்தியமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொம் ஹெரிசன் குறிப்பிடுகையில், “நாட்டின் தற்போதைய நிலை காரணமாக போட்டிகள் அனைத்தையும் ஒத்திவைக்க நேரிட்டுள்ளது. அத்துடன், இப்போது எமக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், எதிர்வரும் மே 28ம் திகதிவரை தொழில்முறை போட்டிகளை நடத்தமுடியாது என்ற அறிவிப்பு எமக்கு கிடைத்துள்ளது”

“அதற்கு அமைய நாம் இந்த பருவகாலத்துக்கான போட்டிகளை அட்டவணைப்படுத்த எண்ணியுள்ளோம். குறித்த போட்டி அட்டவணைகளை காலத்திற்கு ஏற்க அமைக்க வேண்டும் என்பதுடன்,  கிரிக்கெட்டை பாதுகாக்கவும், அதனை பொருளாதார ரீதியிலும் அவதானிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

இங்கிலாந்து கிரிக்கெட் சபையை பொருத்தவரை, அடுத்து நடைபெறவுள்ள தொடர்காளான மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர், T20 ப்ளாஸ்ட் தொடர் மற்றும் இந்திய மகளிர் அணிக்கு எதிரான தொடர் என்பவற்றின் மீது அவதானம் செலுத்தி வருகின்றது. 

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இந்த தொடர்களுக்கு இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புதல் வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தொடர்கள் ஜூலை மாத மத்திய பகுதியில் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்த தொடர்களை நடத்துவதற்கான முயற்சிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஈடுபட்டு வருகின்றது.

இதேநேரம், இந்த பருவகாலத்தின் ஆரம்ப போட்டிகளை இரசிகர்கள் இல்லாமல் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஈடுபட்டு வருகின்றது. இரசிகர்கள் இல்லாவிடினும், நேரடியாக போட்டிகளை ஒளிபரப்பி அதன் மூலம் இரசிகர்களை உற்சாகப்படுத்தும் முனைப்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை உள்ள போதும், அதற்கான அனுமதிகளை இங்கிலாந்து அரசாங்கம் இதுவரையில் வழங்கவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றலிருந்து தப்பிய பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் (PSL) பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள்

எவ்வாறாயினும், அடுத்து வரும் வாரங்களில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை, இங்கிலாந்து அரசாங்கத்துடன், தேவையெனில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது. இவ்வாறு பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் பட்சத்தில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க