நியூசிலாந்து டெஸ்ட் தொடர் இந்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய இந்திய டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து – இந்திய அணிகள் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றன.
>> மே.தீவுகள் தொடருக்கான இலங்கை T20I குழாம் அறிவிப்பு!
இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்த வாரம் 16ஆம் திகதி தொடக்கம் பெங்களூரில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இந்த தொடரில் பங்கெடுக்கும் இந்திய வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய டெஸ்ட் குழாத்தில் உபாதை காரணமாக வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சமி நீக்கப்பட்டுள்ளார். அதேநேரம் நியூசிலாந்து தொடரில் ஜஸ்பிரிட் பும்ரா பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மொஹமட் சமி கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் இருந்து உபாதையினால் சிரமப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது 16ஆவது வீரராக இந்திய டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்ட யாஷ் தயாலிற்கும் நியூசிலாந்து தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் மேலதிக வீரர்களாக வேகப்பந்துவீச்சாளர்களான ஹர்சித் ரனா, மயான்க் யாதவ் மற்றும் பிரசித் கிரிஷ்னா ஆகியோர் நிதிஷ் ரெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய டெஸ்ட் குழாம்
ரோஹிட் சர்மா (தலைவர்), ஜஸ்பிரிட் பும்ரா (பிரதி தலைவர்), யஷாஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, KL ராகுல், சர்பராஸ் கான், ரிசாப் பாண்ட், துருவ் ஜூரேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, அக்ஷார் பட்டேல், குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ், ஆகாஷ் தீப்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<