இலங்கை கால்பந்தின் உத்தியோகபூர்வ கால்பந்து பங்களாரான நிவியா

204

இந்தியாவின் முதன்மையான விளையாட்டு நாமங்களில் ஒன்றான நிவ்யா கால்பந்து நிறுவனம் (NIVIA FOOTBALL), இலங்கை தேசிய கால்பந்து அணியினதும், இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடத்தப்படுகின்ற ஏனைய சில கால்பந்து போட்டித் தொடர்களினதும் உத்தியோகபூர்வ கால்பந்து பங்காளராக இலங்கை கால்பந்து சம்மேளனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.   

FFSL தலைவர் மற்றும் சகாக்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

கடந்த வார இறுதியில் முக்கிய திருப்பமாக …….

இலங்கை கால்பந்து இல்லத்தின் கேட்போர்கூடத்தில் நேற்றுமுன்தினம் (03) இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா, ப்ரீவில் ஸ்போர்ட்ஸ் தனியார் நிறுவனத்தின் (Freewill Sports (Pvt) Ltd) நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் கிஷோர் தாபேர், அந்த நிறுவனத்தின் ஏற்றுமதி பிரிவின் முகாமையாளர் சுராப் குப்தா மற்றும் கொழும்பு ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் (Colombo Sports Company) தலைவர் மில்ரோய் பெரேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்படி, எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு இலங்கை தேசிய கால்பந்து அணி,  மகளிர் தேசிய கால்பந்து அணி, 23 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி, ப்ரீமியர் லீக் டிவிஷன் 1 மற்றும் டிவிஷன் 2 உள்ளிட்ட கால்பந்து தொடர்களின் உத்தியோகபூர்வ கால்பந்து வழங்குனர்களாக நிவியா நிறுவனம் செயற்படவுள்ளது.  

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியில் 1934ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிவியா கால்பந்து, ப்ரீவில் ஸ்போர்ட்ஸ் தனியார் நிறுவனத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றது. அத்துடன், மெய்வல்லுனர் உபகரணங்கள், கால்பந்து, கிரிக்கெட், ஹொக்கி, பெட்மிண்டன், கூடைப்பந்து மற்றும் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுக்களினது உபகரணங்களையும் அந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது.

இதுஇவ்வாறிருக்க, 2000ஆம் ஆண்டு முதல் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் சான்றிதழைப் பெற்றுக்கொண்ட நிவ்யா கால்பந்து, Ashtang மற்றும் Antrix கால்பந்து, FIFA QUALITY PRO கால்பந்து உள்ளிட்டவைகளின் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டுள்ளன. அதேபோல, குறித்த கால்பந்துகளில் காணப்படுகின்ற தனித்துவமான அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு காரணமாகவே பென்டன்ட் சான்றிதழையும் பெற்றது.

தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பக்கீர் அலி பதில்

பஹ்ரெய்னில் அண்மையில் நிறைவுக்கு வந்த 23 ……

இலங்கை கால்பந்தின் உத்தியோகபூர்வ பங்காளராக இணைந்துகொள்ள கிடைத்தமை தொடர்பில ப்ரீவில் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் கிஷோர் தாபேர் கருத்து தெரிவிக்கையில்,

”மிக நீண்டகால வரலாற்றைக் கொண்ட இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஒரு பங்காளராக இணைந்துகொள்ள கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கை கால்பந்துக்கு மிகவும் நீண்ட தூரம் பயணிக்க முடியும். அதற்கான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுப்பதே எனது குறிக்கோளாகும். அதேபோல, இங்குள்ள வீரர்களுக்கு சர்வதேச தரத்திலான வீரர்களாவதற்கான குறிக்கோளும் இருக்கவேண்டும்” என தெரிவித்தார்.

இதேநேரம், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா கருத்து வெளியிடுகையில், ”நிவியா கால்பந்து போன்ற சர்வதேச தரத்திலான நிறுவனத்துடன் இணைந்துகொள்ள கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இது இலங்கை கால்பந்து சம்மேளனத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். எனவே ப்ரீவில் ஸ்போர்ட்ஸ் தனியார் நிறுவனத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்தார்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<