முதல் ஒருநாள் போட்டியிலிருந்து வெளியேறும் டிக்வெல்ல

157
Niroshan Dickwella

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

நிரோஷன் டிக்வெல்ல டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளதன் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளரும், தேர்வுக்குழு தலைவருமான அசந்த டி மெல் உறுதிப்படுத்தியுள்ளார்.

உபுல் தரங்கவின் சதத்துடன் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இலங்கை பதினொருவர்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் பயிற்சிப்..

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்கான 20 பேர்கொண்ட உத்தேச குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டிருந்தது. குழாத்தில் நிரோஷன் டிக்வெல்ல இணைக்கப்பட்டிருந்ததுடன், குறித்த குழாமானது கடந்த 12ம் திகதியிலிருந்து கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானம் மற்றும் கொழும்பு பி.சரா ஓவல் மைதானங்களில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

நிரோஷன் டிக்வெல்ல இலங்கை டெஸ்ட் குழாத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றார். எனினும் இவர் கடைசியாக கடந்த வருடம் மே மாதம் ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார். அதன் பின்னர், நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான குழாத்தில் இவர் இணைக்கப்படவில்லை. அதுமாத்திரமின்றி இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான T20I தொடரிலிருந்தும் இவர் நீக்கப்பட்டிருந்தார்.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியில் பெயரிடப்பட்டிருந்த கமிந்து மெண்டிஸும் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளதால் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டி எதிர்வரும் 20ம் திகதி கட்டுநாயக்கவில் நடைபெறவுள்ளதுடன், தொடரின் முதல் ஒருநாள் போட்டி 22ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<