நிபுன் கருணாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி பதினொருவர் அணி

2614
Nipun Karunanayake

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுநர் கழகத்தின் கிரிக்கெட் அணித்தலைவர் நிபுன் கருணாநாயக்க, பதினோரு பேர் கொண்ட இலங்கை ஜனாதிபதி அணியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று பெப்ரவரி (12ஆம் திகதி) மொறட்டுவ, டி சொய்சா கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாக உள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான 3 நாட்களை கொண்ட பயிற்சி போட்டியில் இவர் அணியை வழிநடத்தவுள்ளார்.

இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான சவாலை இலங்கை அணி எதிர்கொள்ளுமா?

தெரிவு செய்யப்பட்டுள்ள 13 பேர் கொண்ட இந்த அணியில் வலது கை சுழல் பந்து வீச்சாளர் தரிந்து கௌஷால் மாத்திரமே சர்வதேச போட்டிகளில் பங்குபற்றிய ஒரே ஒரு வீரராவார். எனினும், 2015ஆம் ஆண்டு அவரது துஸ்ரா பந்து  ஐசிசி (ICC) விதிகளுக்கமைய இல்லாததால் சர்வதேச போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

பிரிமியர் லீக் A பிரிவில், 9 போட்டிகளில் பங்குபற்றிய இடதுகை துடுப்பாட்ட வீரர் நிபுன் கருணாநாயக்க மூன்று சதங்கள் மற்றும் 4 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 926 ஓட்டங்களுடன் முன்னிலையில் இருக்கிறார்.

கொழும்பு கோல்ட்ஸ் கழக துடுப்பாட்ட வீரர் ரொன் சந்திரகுப்த கடந்த பிரிமியர் லீக் B பிரிவுக்கான கழக போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் பங்குபற்றி 837 ஓட்டங்களை பதிவு செய்திருந்தார். அத்துடன், B பிரிவுக்கான பிரிமியர் லீக் போட்டிகளில் கூடிய ஓட்டங்களை பதிவு செய்த குருநாகல இளையோர் கிரிக்கெட் கழக துடுப்பாட்ட வீரர் ஹஷான் பிரபாத்தும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவப்படையை சேர்ந்த லியோ பிரான்சிகோ மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியில் விளையாடும் டிலான் ஜெயலத் ஆகியோர் விக்கெட் காப்பாளர்களாக செயற்படவுள்ளனர். அதேநேரம் விமுக்தி பெரேரா, கசுன் மதுஷங்க, நிசல தாரக மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

மொறட்டுவ, டி சொய்சா கிரிக்கெட் மைதானம் சுழல் பந்து வீச்சுக்கு உகந்ததாக இருப்பதால், உள்ளூர் கழக போட்டிகளில் இதுவரை 9 போட்டிகளில் பங்குபற்றி 77 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள சிலாபம் மேரியன்ஸ் கழக இடது கை சுழல்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார மற்றும் தரிந்து கௌஷால் ஆகியோர் சுழல் பந்து வீச்சாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி பதினொருவர் அணி குழாம்

நிபுன் கருணாநாயக்க (ப்ளூம்பீல்ட்)

இரோஷ் சமரசூரிய (செரசன்ஸ் கழகம்)

ஹஷான் துமிந்து (கோல்ட்ஸ்)

டிலான் ஜெயலத் (SSC)

ஹஷான் பிரபாத் (குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம்)

லியோ பிரான்சிகோ (இலங்கை இராணுவப்படை விளையாட்டு கழகம்)

ரொன் சந்திரகுப்தா (கொழும்பு கோல்ட்ஸ் கழகம்)

கசுன் மதுஷங்க (SSC)

அசித்த பெர்னாண்டோ (சிலாபம் மேரியன்ஸ் கழகம்)

விமுக்தி பெரேரா (SSC)

நிசல தரக்க (கோல்ட்ஸ்)

மலிந்த புஷ்பகுமார (சிலாபம் மேரியன்ஸ் கழகம்)

தரிந்து கௌஷால் (NCC)

உத்தியோகபூர்வ அதிகாரிகள் :

அணி முகாமையாளர் – ஜெர்ரி வொல்டர்ஸ்

தலைமை பயிற்சியாளர் – சுமித்ர வர்ணகுலசூரிய

வேகப்பந்து பயிற்சியாளர் – சமிந்த வாஸ்

சுழல்பந்து  பயிற்சியாளர்  – பியால் விஜதுங்க

களத்தடுப்பு பயிற்சியாளர் – உபுல் சந்தன

உடற்பயிற்சியாளர் (Physiotherapist) – பிரியந்த விக்கிரமசிங்க

பயிற்சியாளர் – தர்ஷன வீரசிங்க

ஆய்வாளர் (Analyst) – என். துலிப் சமரசெக்கற