இலங்கை வீரர்களுக்கு சீனாவில் விசேட பயிற்சி முகாம்

245

ஆசிய விளையாட்டு விழாவிற்கு முன் விசேட பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக இலங்கை மெய்வல்லுனர் அணியொன்று கடந்த 2ஆம் திகதி சீனாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. 

இம்மாத இறுதியில் சீனாவின் Hangzhou நகரில் நடைபெறவுள்ள 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவிற்கு பரிந்துரைக்கப்பட்ட இலங்கை மெய்வல்லுனர் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்காக 3 வார கால விசேட பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   

தேசிய ஒலிம்பிக் குழு, இலங்கை மெய்வல்லுனர் சங்கம் மற்றும் சீனா மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த சிறப்பு பயிற்சி முகாமானது சீனா ஒலிம்பிக் சங்கத்தின் பூரண அனுசரணையுடன் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும் 

>> ஆசிய விளையாட்டு விழாவிற்கு இலங்கையிலிருந்து 96 வீரர்கள்

அதன்படி, சீனா சென்றுள்ள இலங்கை மெய்வல்லுனர் அணியில் 6 வீரர்கள் மற்றும் 3 வீராங்கனைகள் உட்பட 9 பேர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல, இலங்கை மெய்வல்லுனர் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் முகாமையாளராகவும் முத்திக துஷாவும், பயிற்சியாளராக விமுக்தி சொய்சாவும் இந்த சுற்றுப்பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர் 

இதேவேளை, ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை மெய்வல்லுனர் அணியின் ஏனைய வீரர்கள் இம்மாதம் 26ஆம் திகதி சீனா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது 

சீனா சென்றுள்ள இலங்கை மெய்வல்லுனர் அணி விபரம் 

அருண தர்ஷன, காலிங்க குமாரகே, பபசர நிக்கு, ரஜித ராஜகருணா, பசிந்து கொடிகார, தினுக தேஷான், நதிஷா ராமநாயக்க, ஜெய்ஷி உத்தரா, சயூரி மெண்டிஸ் 

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<