ஈரானின் தலைநகரம் டெஹ்ரானில் இன்று ஆரம்பமாகிய 8ஆவது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட நிமாலி லியனாரச்சி, வெண்கலப் பதக்கம் வென்று 2018இல் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தார்.
ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 25 நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெறுகின்ற ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இம்முறை இலங்கையிலிருந்து 5 வீரர்கள் கலந்துகொண்டடுள்ளனர். இதில் போட்டிகளின் முதல் நாளாள இன்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியனான கயன்திகா அபேரத்ன மற்றும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியனான நிமாலி லியனாரச்சி ஆகியோர் களமிறங்கியிருந்தனர்.
44ஆவது தேசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் பெப்ரவரியில்
விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவின்…
இதன்படி, முதலிரண்டு இடங்களைப் பெற்றுக்கொள்ளும் முனைப்பில் இப்போட்டியில் கலந்துகொண்ட நிமாலிக்கு 3ஆவது(2.10.83 செக்கன்கள்) இடத்தையும், கயன்திகா அபேரத்னவுக்கு(2.11.20 செக்கன்கள்) நான்காவது இடத்தையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனினும், கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய உள்ளக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றரில் கலந்துகொண்ட நிமாலி லியனாரச்சி, வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த போட்டியை 2 நிமிடங்களும் 09.30 செக்கன்களில் நிறைவுசெய்த சீனாவின் சொன்யூ வோங் தங்கப் பதக்கத்தையும், 2 நிமிடங்களும் 10.81 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த மற்றுமொரு சீன வீராங்கனையான ஷியிங் ஹு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் தகுதிகாண் போட்டியில் கலந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த உபமாலிகா ரத்னகுமாரி, போட்டியை 55.36 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டு, நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, பெண்களுக்கான முப்பாய்ச்சலில் கலந்துகொண்ட ஹசினி ப்ரபோதா, உள்ளக மெய்வல்லுனரில் புதிய தேசிய சாதனை படைத்தார். குறித்த போட்டியில் 12.77 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த அவர், 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.