வீரர்களின் நடத்தைகள் குறித்து பொதுக் கூட்டத்தில் ஆராயவுள்ள ஐ.சி.சி

468

ஐ.சி.சி. இன் இந்த காலாண்டுக்கான (2018)  பொதுக் கூட்டம் இன்னும் இரண்டு நாட்களில் (26) கொல்கத்தாவில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தின் போது, கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானம், ஓய்வறை என்பவற்றில் வீரர்களின் நடத்தை  எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்து விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முரளியின் கருத்துக்கு இலங்கை கிரிக்கெட் பதிலடி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், நட்சத்திர சுழல் பந்துவீச்சாளருமான …

கிரிக்கெட் வீரர்கள் போட்டிகளின் போது கோபமாக செயற்பட்டு பிரச்சினைகளை உருவாக்குவது தற்போது (.சி.சி இன்) நிர்வாகத்தினருக்கு பெரும் தலையிடிகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது. இதனை சரி செய்ய ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.“ என நம்பக்தகுந்த அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையின் படி .சி.சி எதிர்வரும் காலங்களில் இப்படியான பிரச்சினைகளைத் தவிர்க்க குறிப்பிட்ட வீரர்களின் மீதும், அணிகளின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் திட்டங்களை உடனடியாக அமுலுக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

.சி.சி. இன் நிறைவேற்று அதிகாரியும் அந்நிறுவனத்தின் செயலாளருமான, அயின் ஹிக்கின்ஸ் இந்த காலாண்டுக் கூட்டத்தொடரில், “வீரர்களின் நடத்தைஎன்ற தலைப்பில் அதிக விடயங்கள் பேசப்படும் எனக் கூறியிருக்கின்றார். இதேவேளை, .சி.சி. இன் மற்றுமொரு மேலதிகாரிகளில் ஒருவரான டேவ் ரிசர்ட்சன் இந்த பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க கிரிக்கெட் வீரர்களின் நடத்தைகள் பற்றிய ஒரு அறிக்கையினை ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

கடந்த மாதம் இடம்பெற்றிருந்த சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T20 தொடரின் போட்டி ஒன்றின் போது, பங்ளாதேஷ் வீரர்கள் இலங்கை அணிக்கு எதிராக மோசமான நடத்தைகளை காட்டியிருந்தனர். பங்களாதேஷ் வீரர்களின் இந்த செயல்கள் .சி.சி. இற்கு பெரும் சங்கடத்தினை ஏற்படுத்தியிருப்பதாக இந்தியாவின்தி ஹிந்துநாளிதழ் குறிப்பிட்டிருக்கின்றது.

மோசமான நடத்தைக்கு வருந்திய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

சுதந்திரக் கிண்ண T20 முத்தரப்பு தொடரில் இலங்கையுடனான போட்டியில் மோசமான …

கொழும்பில் இடம்பெற்றிருந்த குறித்த போட்டியில், பங்களாதேஷ் அணியின் தலைவர் சகீப் அல் ஹஸன் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிக் கொண்டிருந்த தனது அணி வீரர்களை மைதானத்தினை விட்டு வெளியேறுமாறு கடும் தொனியில் குறிப்பிட்டிருந்ததோடு, பங்களாதேஷின் பதில் வீரர்களில் ஒருவரான நூருல் ஹசன் சோஹான், இலங்கை அணித்தலைவர் திசர பெரேராவிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தார்.

அதோடு, குறித்த போட்டி முடிவடைந்த பின்னர் பங்களாதேஷ் அணியினரால் அவர்கள் மைதானத்தில்  தங்கியிருந்த ஓய்வறைக் கதவின் கண்ணாடியும் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இச் சம்பவங்கள் முடிவடைந்த பின்னர், .சி.சி நூருல் ஹசன், சகீப் அல் ஹசன் ஆகியோருக்கு போட்டிக் கட்டணத்தில் 25% அபராதமும், நன்னடத்தை விதி மீறல் புள்ளி ஒன்றிணையும் வழங்கியிருந்தது.

கிரிக்கெட் நாடகமாக மாறியுள்ள ஆஸி வீரர்களின் சூழ்ச்சி

கிரிக்கெட் என்பது கனவான்களின் விளையாட்டு என்பதால் அதில் சில சம்பிரதாயங்களை …

இது மாதிரியாக கடந்த மாதம் தென்னாபிரிக்க அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் டர்பனில் இடம்பெற்றிருந்த டெஸ்ட் போட்டியின் போது, வீரர்களுக்கான ஓய்வறையின் மாடிப்படியில் வைத்து டேவிட் வோனர்,  குயின்டன் டி கொக் ஆகியோர் மோதலில் ஈடுபட்டிருந்தனர். இச் சம்பவம் நடைபெற்ற பின்னர், இரண்டு அணிகளுக்கும் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டின் புனிதத் தன்மையினை பேணவில்லை என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், அவுஸ்திரேலியாதென்னாபிரிக்க அணிகள் இடையில் கேப் டவுனில் இடம்பெற்றிருந்த டெஸ்ட் போட்டியில், பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தினால் பெரும் சர்ச்சைகள் கிளம்பியிருந்தன. இந்த நிகழ்வினை அடுத்து, .சி.சி. முன்னாள் டெஸ்ட் வீரர்கள் அடங்கிய ஒரு குழாமை உருவாக்கி வீரர்களின் ஒழுக்ககோவையினை மீள் பரிசீலனை செய்யத் தீர்மானித்திருந்தது.

வீரர்களின் நடத்தை தொடர்பான விடயங்கள் தவிர, .சி.சி. இன் இந்த காலாண்டு பொதுக் கூட்டத்தில் 2018 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை, .சி.சி இன் தவிசாளராக (Chairman) செயற்பட சுயாதீனமான ஒருவரை தேர்தல் மூலம் தெரிவு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க