பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும் நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து சென்றிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரினை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது.
தமீம் இக்பாலின் உடல்நிலை குறித்து வெளியான புதிய அறிவிப்பு
இந்த ஒருநாள் தொடர் இந்த வார இறுதியில் ஆரம்பிக்கும் நிலையில் ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும் நியூசிலாந்து வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெறும் IPL தொடரில் முன்னணி நியூசிலாந்து வீரர்கள் பங்கேற்பதன் காரணமாக காரணமாக அனுபவம் குறைந்த வீரர்கள் கொண்ட தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து குழாத்தில் 21 வயது நிரம்பிய அறிமுகத் துடுப்பாட்ட வீரரான முஹம்மட் அப்பாஸிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்த மற்றுமொரு அறிமுக வீரரான நிக் கெல்லியும் நியூசிலாந்து குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.
மறுமுனையில் 2023ஆம் ஆண்டு நியூசிலாந்திற்காக அறிமுகம் பெற்ற சுழல்பந்துவீச்சாளரான ஆதி அசோக்கும் நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்பட்டிருக்க கேன் வில்லியம்சன் சொந்தக் காரணங்கள் கருதி பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை எஞ்சிய நியூசிலாந்து குழாம் சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் ஆடிய ஏனைய வீரர்கள் மூலம் பிரதியீடு செய்யப்பட்டிருக்கின்றனர்.
பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் மார்ச் 29ஆம் திகதி நேப்பியர் நகரில் ஆரம்பமாகுவதோடு தொடரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் போட்டிகள் முறையே ஹமில்டன் (எப்ரல் 02) மற்றும் மௌன்ட் மங்னாய் (ஏப்ரல் 05) ஆகிய நகரங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து ஒருநாள் குழாம்
டொம் லேதம் (தலைவர்), முஹமட் அப்பாஸ், ஆதி அசோக், மைக்கல் பிரஸ்வெல், மார்க் சாப்மன், ஜேக்கப் டப்(f)பி, மிட்ச் ஹேய், நிக் கெல்லி, டேரைல் மிச்சல், வில்லியம் ஓ’ரூர்க்கே, பென் சோர்ஸ், நதன் ஸ்மித், வில் யங்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<