இங்கிலாந்தின் T20 உலகக் கிண்ண அணி அறிவிப்பு

419
Getty Images

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கவிருக்கும் 15 பேர் அடங்கிய தமது வீரர்கள் குழாத்தினை அறிவித்திருக்கின்றது.

உலகின் மிக வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார்

இயன் மோர்கன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இங்கிலாந்து குழாத்தில் சகலதுறைவீரரான பென் ஸ்டோக்ஸிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. பென் ஸ்டோக்ஸ், விரல் உபாதை ஒன்றினை அடுத்து தனது மனநிலையினை கருத்திற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காலவரையற்ற ஓய்வினை அறிவித்த நிலையிலேயே இங்கிலாந்தின் உலகக் கிண்ண அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றார்.

இதேநேரம், 2017ஆம் ஆண்டிற்கு பின்னர் வேகப் பந்துவீச்சாளரான டைமால் மில்ஸ், இங்கிலாந்தின் உலகக் கிண்ண அணியில் முதன்முறையாக இணைக்கப்பட்டிருக்கின்றார். அண்மையில், நடைபெற்று வந்த உள்ளூர் T20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய நிலையிலேயே டைமால் மில்ஸிற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் 2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணிக்காக ஆடாத சகலதுறை வீரரான டேவிட் வில்லிக்கும் இங்கிலாந்தின் T20 உலகக் கிண்ண அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

T20 உலகக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

இவர் தவிர கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி, சேம் கர்ரன் ஆகிய வீரர்களும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தின் T20 உலகக் கிண்ண அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். 

T20 உலகக் கிண்ணத் தொடரில், சுபர் 12 சுற்றில் நேரடியாக விளையாடும் தகுதியினை பெற்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் காணப்படும் குழுவில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து T20 உலகக் கிண்ண அணி

இயன் மோர்கன் (தலைவர்), மொயின் அலி, ஜொன்னி பெயர்ஸ்டோவ், சேம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சேம் கர்ரன், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டோன், டாவிட் மலான், டைமல் மில்ஸ், ஆதில் ரஷீட், ஜேசன் ரோய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…