பார்சிலோனா அணியில் விளையாடிய தனது முன்னாள் சக வீரரான நெய்மார், தமது சவாலான போட்டியாளரான ரியெல் மெட்ரிட்டில் இணையவிருப்பதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது அச்சத்தை வெளியிட்டுள்ளார்.
காயத்திலிருந்து மீண்டு வரும் நெய்மார் பிரேசில் உலகக் கிண்ண குழாமில்
காயத்தில் இருந்து மீண்டு வரும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்…
‘பார்சிலோனாவை பொறுத்தவரை இது பயங்கரமானதாக இருக்கும்‘ என்று ஆர்ஜன்டீனாவின் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மெஸ்ஸி குறிப்பிட்டார்.
நெய்மார் கடந்த பருவத்தில் பார்சிலோனாவில் இருந்து வெளியேறி பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் (PSG) அணிக்கு சாதனை தொகையான 222 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தமானார். எனினும் பிரேசில் நட்சத்திரமான நெய்மார் பிரான்சில் இருந்து வெளியேறி மீண்டும் ஸ்பெயினுக்கு வர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
நெய்மாரை வாங்குவது குறித்து இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைடெட் அணியும் தொடர்புபடுத்தி பேசப்படுகிறது. எனினும் 26 வயதான நெய்மார் ஸ்பெயினின் ரியெல் மெட்ரிட் கழகத்தில் இணைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் ரியெல் மெட்ரிட்டில் இணையும் பட்சத்தில் ஸ்பெயினின் அடுத்த லா லிகா பருவத்தில் தனது முன்னாள் கழகமான பார்சிலோனாவுக்கு எதிராக அணிதிரளுவார். இதனை மெஸ்ஸி மிகப் பெரிய சவாலாக காண்கின்றார். இதனாலேயே அதனை அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
‘அவர் ரியெல் மெட்ரிட்டுக்கு வந்தால் அது எமக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். ஏற்கனவே பலமாக இருக்கும் ரியெல் மெட்ரிட் அணி ஒரு கால்பந்து அணியாக மேலும் பலம்பெற்று விடும்‘ என்கிறார் மெஸ்ஸி.
மெஸ்ஸியுடன் சேர்ந்து நெய்மார் பார்சிலோனா அணிக்கு ஒரு சம்பியன்ஸ் லீக் பட்டம் மற்றும் இரு லா லிகா பட்டங்களை வென்று கொடுத்துள்ள வீரர் என்பது பல கால்பந்து ரசிகர்களாலும் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.
நெய்மார் இந்த பருவத்துடன் PSG அணியில் இருந்து வெளியேற எதிர்பார்த்திருப்பதாக கடந்த வார ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. ரியெல் மெட்ரிட் அணி ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், நெய்மாரை அந்த அணியில் இணைவதற்கான செயற்பாடுகளை விரைவுபடுத்தும்படி அவரது தந்தை கால்பந்து முகவர் பினி சஹாவியிடம் கேட்டிருப்பதாக ‘சண்டே மிர்ரர்‘ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பருவத்துடன் பார்சிலோனாவிலிருந்து விடைபெறும் இன்னியஸ்டா
பார்சிலோனா கால்பந்து ஜாம்பவான் அன்ட்ரெஸ்…
ரியெல் மெட்ரிட் அணியில் இணைய வேண்டாம் என்று நெய்மாரை கேட்பீரா? என்று மெஸ்ஸியிடன் கேட்கப்பட்டபோது அவர் புன்னகைத்தவாறு, ‘நான் என்ன நினைக்கிறேன் என்று அவருக்கு தெரியும். அது பற்றி நான் அவருக்கு ஏற்கனவே கூறியிருக்கிறேன்!’ என்றார்.
எவ்வாறாயினும் தனது எதிர்காலம் பற்றிய கேள்விகளால் களைப்படைந்துவிட்டதாக நெய்மார் குறிப்பிட்டுள்ளார். ‘தற்போது எனது இலக்கு உலகக் கிண்ணமே. கழக பரிமாற்றங்கள் பற்றி பேச இது நேரமல்ல. அது பற்றி பேசி நான் களைப்படைந்துவிட்டேன்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
இவை அனைத்திற்கும் மத்தியில், PSG அணி அடுத்த பருவகாலத்திற்கான தமது புது ஜெர்ஸியை கடந்த வாரம் வெளியிட்டது. இதை அணிந்து கொண்டு, தனது டுவிட்டர் பக்கத்தில், புதிய ஜெர்ஸியை அணிவதற்கு பெருமையாக இருக்கிறது என நெய்மர் குறிப்பிட்டிருந்தமையும் நினைவுபடுத்தப்பட வேண்டிய விடயமாகும்.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<